324 அநுபல்லவி அடித்தானே அருங்காய் கனிகளை ஒடித்தானே அரை நொடிக்குள் விசுவரூபம் பிடித்தானே அந்த ராவணன் கீர்த்தியை குடித்தானே கைகையக் கொட்டி தொடைதட்டிக் கொண்டு (அடி) சரணங்கள் 1. ஆடச்சேயும் அசையச்சேயும் அறுந்தன சிலமரங்கள்-கைகளை மூடச்சேயும் முறுக்கச்சேயும் முறிந்தன சிலமரங்கள்-வேர்பிடுங்கிச் சாடச்சேயும் தாவச்சேயும் தறிந்தன சிலமரங்கள்-கொண்டாட்டம் பாடச்சேயும் பாயச்சேயும் பறிந்தன சிலமரங்கள்-வெகுவெகு கோடானு கோடிகளாக் கொம்பும் கொடியுமாகக் குறைந்தான் சிலமரத்தை-பெருகிய நீடாழி முகட்டிலே அணைபோலே கிடக்க நிறைத்தான் சிலமரத்தை-தேவர்கள் வாடாமல் ராட்சதர்கள் பாராமல் வெளியெங்கும் மறைத்தான் சிலமரத்தை-வாரிவாரி ஏடாகூட மாலங்கைத் தெருக்கள் தெருக்கள் எல்லாம் இறைத்தான் சிலமரத்தை-இப்படி மேடென்றும் காடென்றும் தெரியாமல் முடிய விசைகொண் டெறிந்தமரம் திசைதிசை-போய்ப்படிய மாடங்களும் அரக்கர் கூடங்களும் இடிய மதிகள் இலங்கை வீடெல்லாம் சிதறிப் பொடி - பொடிய (அடி) 2. அடிக்கடிமரம் ஒடிக்கும் ஓசையில் அண்டமும் வயிறுளைக்க-அதுகண்டு எடுத்தராட்சதப் பெரும்படைக்கடல் எங்கெங்கும் ஓடிவளைக்க-சினமுடன் கடுத்தரதகச துரகபதாதிகளை காலனும் கண்டுகளைக்கத்-திசைதிசை |