325 திடுக்கெனக் கருந்தூளி செந்தூளியாக சேடனும் முடியிளைக்க-வந்தளவில் தடுக்காமல் மரத்தின்மேல் மரங்களா விட்டெறிந்து சதைத்தான் சிலபடையை-மரம்பிடுங்கிப் பொடுக்கெனப் பள்ளத்திலே பிணம்பிணமா அடித்துப் புதைத்தான் சிலபடையைத்-தேர்களை ஒடுக்கி மளமளென நொறுக்கி நொறுக்கிவிழ உதைத்தான் சிலபடையை-மீன்குலம் வெடுக்கெனவே பிடுங்கி நடுக்கடலிலே தூற்றி விதைத்தான் சிலபடையைக்-கையினாலே அடுத்தவர் ஆயுதத்தைப் பறித்துப் பற்றி பற்றி அழுகல் வெற்றிலைபோலே குழைய எற்றி எற்றி வடுப்பட வாலாலே சுருக்கிச் சுற்றி சுற்றி வயிற்றுக் கடல்களெல்லாம் வாயில் வரக் குத்தி குத்தி (அடி) 3. அதுசமயத்துக்கு மரங்கள் வாய்த்ததே அய்யனுக்குக் கொண்டாட்டம்-என்சொல்லப் பதியில் புகுந்ததே பருந்து காசும்முதல் பறவைகள் ஆட்டம்பாட்டம்-மண்டைகளைச் சிதறுத் தேங்காய்போலே உடைத்தும் சாமிக் குண்டோ சிறிதாகிலும் வாட்டம்-ராவணன் ததியில் அனுமானுக்கு உதவியா வளர்த்தானே தன்னுடைய பெருந் தோட்டம்-அங்கங்கே குதிரைமேல் ஆனைவிழத் தேர்மலைபோல் விழக் குழிந்ததே பெரும் பள்ளம்-பள்ளத்திலே எதிரிடும் ஆறுபோலே பெருகிக் கரைபுரள எடுத்ததே ரத்த வெள்ளம்-பசிபோகக் கதியில்லா நரிகளும் நாயும் பேயும் உண்டு களித்ததே தங்கள் உள்ளம்-குரங்கென்று விதிமோசம் ஆகவந்தோம் நமக்கிவன் எமன்என்ன விட்ட தரக்கர் கள்ளம்-கிடைக்காத புதுவிருந் திதுவென்று மெத்த மெத்த வேதாள பூதங்கள் நடமிடப் பிணநாற்றமும் மீள |