பக்கம் எண் :

326

எதிர்எதிர் அரக்கியர் அழுகைக் குரல்கள் நீள
     எண்பதினாயிரம் கிங்கரர்களும்    மாள (அடி)

சம்புமாலிவதை

விருத்தம்-18

கெடிகொண்ட வளமும் அந்தக் கிங்கரர் களும்போய் மாள
முடிகொண்ட அரக்கன் கோபம் மூண்டிட எழுந்த சேனை
வடிகொண்ட கடல்போல் பட்டமண்கிடந்திடும் இருப்புத்
தடிகொண்ட அனுமான் கையால் சம்புமா லியும்பட்டானே

தரு-15

அடாணாராகம்                            ஆதிதாளம்

பல்லவி

மடிந்தானே சம்புமாலி - அனுமான் கையால்
முடிந்தானே சம்புமாலி

அநுபல்லவி

அடங்காத ரகுநாதன் விடும்குணமுள்ள தூதன்
நெடுங்கிரி எனமண்டு தடங்கையால் அறை கொண்டு
மடங்கிய வாயிலே முடங்கிய குடல்எழ
தொடங்கிய உதிரமும் குடங்குட மாவிழ           (மடிந்)

சரணங்கள்

1. நறுக்குவேன் இதுவொரு        குரங்கென எதிர்ப்பட்டு
  செருக்களத் தினிலேறி         பெருக்கவே கணைதொட்டு
  அரக்கர் படைக்கடலை        நெருக்கிநெருக்கி யிட்டு
  இருப்புலக் கையினாலே        அரைக்கக்கொடுத்து விட்டு(மடிந்)

2. நீலப் பெரிய கடல்            போலத்திரண்டு மொய்த்து
  மேலிட்ட நிருதரை            கோலிப்பொருத வைத்து
  சோலைக் கரும்புகளை         ஆலைக்கிடுவ தொத்து
  வாலுக்கும் அனுமந்தன்        காலுக்கும்ஒப்பு வித்து (மடிந்)

3. மோதி வரும்படையை         ஏதும் விடாமற் கொல்ல
  மாதர் அழுதழுது             வீதியெங்கெங்கும் செல்ல