பக்கம் எண் :

327

  பாதக ராவணன்                   காதினில்இட வல்ல
  தூதர் குரங்கிதுபொல்               லாதென்றலறிச் சொல்ல (மடிந்)

பஞ்சசேனாதிபதிகள் அட்சதன் இவர்கள் வதை 

விருத்தம்-19

    பாய்ந்தசம் புமாலியிந்த விதத்திற்பட்டான்
          பஞ்சசேனாதியரும் படையும் மூண்டார்
    தோய்ந்தவர் தங்களையும் கணத்தினுள்ளே
          தோரணகம் பத்திலிருந் தனுமான் கொன்றான்
    காய்ந்தசினத் துடன்பன்னீ ராயிரம் பேர்
          காதகரும் நாலுலட்சம் காளை மாரும்
    ஏய்ந்தபடைகளும் கொண்டக்ஷதனும் தேர்மேல்
          ஏறினான் மாருதிமேற் சீறினானே

வண்ணத்தரு-16

தோடிராகம்                              ஆதிதாளம்

பல்லவி

வந்தானே ராவணகாதகன் அனுப்பஅக்ஷதன் மிகுத்திடப்படை
தந்தானே தோரணகாலிமுன் மிகச்சமுத்திரம் வளைத்த தொப்பென

     மதகரிகள் பரிகள்     ரதநிரைகள் வரவும்
     வருக வருகஎன       ராகவதூதன்

கண்டானே அண்டகடாகமும் வெடித்திடக் கடுகடுத்தகெர்ச்சனை
கொண்டானே கொண்டிடிபோலவே குதித்தரக்கரை இருப்புலக்கையில்

     அடிகள் முடிகள்பல   கொடிகள் தடிகள் பொடி
     பொடிகள்பட விசிறி    வாலதைவீசி

வளைத்தோடியும் வாரிஅடித்தும் தெரித்தும் விக்கிடமுறித்தும் வீரர்கள்
தலைக்கேதலை மோதி நெரித்தும் சரித்தும் அடிப்படை தொடுக்கும்வாளிகள்

     தவிடு பொடிகள்படி    உதறி உதறி எறி
     சருகும் உமியுமென    ஊதிய போது

காலால் உதைபட்ட பேர்சிலர் கடிக்குள்ளேசிலர் பிடிக்குள்ளேசிலர்
தோளால் அரைபட்டபேர்சிலர் தொடைக்குள்ளேசிலர்இடைக்குள்ளேசிலர்