328 கரம் அற்ற பேர்களும் சிரம் அற்ற பேர்களும் கதியற்ற பேர்களும் ஆகியே விழ அறைவன்ஓர் அறைக்குளேபல கோடிவீரர்கள் வீரர்மேல்விழ எறிவான் ஓர்எறிக்குளேபல கோடிதேருதேரின் வீரர்மேல்விழ அதிரதர் மகரதர் சமரதர் சிதறிட அதலகுதல மொடு சேனைகள் மாளத் தெரிந்தானே அட்சதன்ஊதிய செம்புபோலவே ரண்டுகண்களும் எரிந்தானே அக்கணமேசெல அம்புமாரி பிரசண்டமாகவே தெரித்தனுமனுமடல் இருக்கும் மயிர்முனை முறுக்கில் மறையவும் அந்தமாருதி தலைமேலும் தோளிலும் மார்பிலும் முகத்திலும் கொலுவிருக்கும்தோரண நிலைமேலும் தாளிலும் வாளிகள் தொடுக்கவும் குலைகுலைந்து ராகவ சரணம் அதைமனதில் ஒருமையொடுகருதி விறுவிறென விசையில் ஓடிவந்தெதிர் அடுத்தானே அட்சதன் ஏறிய ஆயிரம்பரிரதத்தை ஓர்கையில் எடுத்தானே விட்டெறி போதினிலே இறங்கிமுன் எதிர்க்கவேபிறகு அவனை இவன் அறைய இவனை அவன் அறைய அவனி டுகவசமும் வில்லும் வாளியும் ஒடித்தானே பல்லொடு குண்டலம் உதிர்ந்திடச் செவிகலங்க ஓரடி அடித்தானே கையினில் அங்கவன் நெடுங்கழுத்தினை மடங்க மாருதி உதறவருபடைகள் கதறநிருதன்முது குரைபட உரைபட ராசவீதியில் நிலத்தோடே தேய அரைத்துக் கரைக்க அட்சதன் மாயவே சிலர் தலத்தோடே ரூபம் மறைத்துப் பசுக்களாம்என மேய்குவார் சிலர் நிணத்திலே சிலர் பிணத்திலே சிலர் நெளித்தபேர்சிலர் ஒளித்த பேர்சிலர் வண்டாகி மறைந்தபேர் சிலர் மான்களென வெளிப்பாய்ந்த பேர்சிலர் மண்டோதரி முன்பினிலேஅடி சாய்ந்தமர மென வீழ்ந்த பேர்சிலர் மலைந்த போரினில் ஒழிந்த தூதுவர் இலங்கை நாதன்முன் வீழ்ந்த பேர்சிலர் |