பக்கம் எண் :

329

அனுமாரை இந்திரசித்து எதிர்த்தல்

விருத்தம்-20

    வீரராம் அரக்கரும் அட்சதனும் இந்த
          விதம்அனுமான் கையாலே அதமாய்ப் போனார்
    ஓரமாத் தூதரும் ராவணன் முன்ஓடி
          உன்மகனும் நமனுலகம் உற்றான் என்றார்
    நாரடா எனக் குரங்கைக் கிழிப்பேன் என்று
          நாற்பது வெள்ளம் சேனை யுடனே வந்தான்
    ஆரடா குரங்கேநீ ஆரடா என்
          றதிர் கண்டான் இந்திரசித் தெதிர் கொண்டானே

அனுமார் இந்திரசித்தோடு பொருதல்

விருத்தம்-21

எதிர்கொண்ட இந்திர சித்தோ டெழும்பின அரக்கர்சேனை
கதிகொண்ட உகாந்தநாளில் கடல்எனவளைப்பக்கண்டான்
மதிகொண்ட அனுமான் கையில் வல்லிருப் புலக்கை கொண்டு
குதிகொண்டான் எமனைப்போலே கூடினான் சாடினானே

தரு-17

மத்தியமாவதிராகம்                        அடதாளசாப்பு

பல்லவி

     அனுமந்தன் அடித்தானே-இந்திரசித்தன்
     மனம் நொந்து துடித்தானே            (அனு)

அநுபல்லவி

அனுமந்தன் அடித்தானே முனைகொண்டு பிடித்தானே
அரக்கர் படையைக் கண்டு இருப்புலக் கையைக் கொண்டு (அனு)

சரணங்கள்

1. கட்டும் என்ற பேரையும்       கிட்டுமென்ற பேரையும்
  கறுவிவந் தோரையும்          மொறுவிவந் தோரையும்

     கைப்படை போய்மாள் உதைத்தான்-சிலபேர்களைக்
     குப்பல் குப்பலாக     வதைத்தான்-நிரைநிரையாக்

  கரிகள் மேற் பரிகளும்    பரிகள்மேற் கரிகளும்
  காலாள்மேல் தேராளும்   தோரள்மேல் காலாளும்