பக்கம் எண் :

330

     கண்பொறி கலங்க          இறைத்தான்-சிலபேர்களை
     மண்களில் அழுந்த         மறைத்தான்-கடல்கடந்த

காலால் அனேகம்பேரை     வாலால் அனேகம்பேரை
கையால் சிலபேர்களை      மெய்யால்-சிலபேர்களை

    கசக்கி மூளைகள்           பொழிந்தான்-கரும்பு போலே
    நசுக்கிச் சாறுகள்           பிழிந்தான் - அரக்கியர்க்கு

கணவனைக் குமரனைத்     துணைவனைத் தெரியாமல்
கதையில் அடித்துடலைச்    சிதையப் பொடித்து பெருங்

     சாற்றில் பஞ்சென     ஊதினான்-சிலரைத் தேங்காய்க்
     கீற்றுக் கீற்றாக        மோதினான் எண்ணிறந்தோர்கள்

கரம்அற்றும் சிரம்அற்றும்    உரம்அற்றும் வரும்ரத்தம்
கண்டிட மெல்லாம் புரள     மண்டை மண்டை ஆய்உருள (அனு)

2. முட்டிவரும் தேரையும்    கிட்டிவரும் தேரையும்
  முடுகிவரும் தேரையும்    கடுகிவரும் தேரையும்

     முன்கையால் வாரித்   தூக்கினான்-தறையில்மோதிச்
     செங்கற் பொடிபோல்  ஆக்கினான்-ஆனைப் படையை

மொத்தியும் குத்தியும் வாலால் சுற்றியும் எற்றியும் வாரி
மூட்டுப் பூச்சிபோல் மடித்துக் கூட்டங் கூட்டமா அடித்து

     முட்டு முட்டா   அடுக்கினான்-கோட்டையும்லங்கைப்
     பட்டணமும்          நடுக்கினான்-அந்நகர்வீதி

முகப்பும் கோபுரங்களும்         வகுப்பும் தாவரங்களும்
முத்துமாடங்களும் தேய்ந்து  சித்திர கூடங்களும் சாய்ந்து

     முடிய வீசி      நொறுக்கினான் கோடைக் காலத்தில்
     இடிபோலவே    உருக்கினான்-அடித்தடித்து

மூலையும் குதிரைமலர்ச்     சோலையும் குதிரைநடைச்
சாலையும் குதிரையலை      வேலையும் குதிரையாக

     முறை முறையாச்சாய்ந்து    விட்டான்-காலால் எற்றித்
     தரையிலே தேய்த்து        விட்டான்-அரக்கர்தலை

மூளையும் சதையும் வண்ணக் காளியும் கூளியும் உண்ண
முழுதும் பேய்க்குலம்ஆட கழுகும் காக்கையும் பாட      (அனு)