331 3. அங்குசமும் தோட்டியும் சங்கிலியும் ஈட்டியும் அஸ்திரமும்சூ லாயுதமும் சஸ்திரமும் வேலாயுதமும் அரக்கர் விடுத்து மொய்க்கவே-அதெல்லாம் அய்யன் பெருத்த புயத்தில் தைக்கவே-தைத்தவைஎல்லாம் அழுந்தத் தோரணம் மேலே குழந்தைச் சூரியன் போலே அட்டகாச மதுபண்ணி இஷ்டராகவனை எண்ணி அமரவே மதித்தானே-பட்டவை எல்லாம் உமிபோலே உதிர்த்தானே - ராவணன் மகன் அடுத்தபடைகளிலும் விடுத்தபடைகளிலும் தொடுத்தபடைகளிலும் பிடித்தவன்மேல்பட அள்ளியே தெறித்தானே-சிலபடையைச் சுள்ளிபோல் முறித்தானே-அரக்கியர்கள் அழுவாரும் தெய்வத்தைத் தொழுவாரும் வீடுவிட் டெழுவாரும் அரக்கன்முன் விழுவாரும் தலைவிரித் தலங்கோலம் ஆனாரே-எல்லாரும் பேய்க் குலம் போலே போனாரே-இந்தப்படியா அடிப்பாரும் குரங்கைக்கட்டிப் பிடிப்போம் என்ன வேகிட்டி ஆர்ப்பரவத்துடள் வந்த நாற்பது வெள்ளமும் சிந்த (அனு) அனுமார் பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்டல் விருத்தம்-22 அனுமான் பின்னையும் இந்திர சித்தம் பெல்லாம் அடித்து வில்லை ஒடித்துச்சா ரதியை மாட்டி மனமாம் தேரையும் வீசி மரத்தால் மோதி மண்டைகலங் கிடஅடித்தான் அரக்கன் அப்பால் சனமான பிரம்மபா சத்தை வீசிக் கட்டினான் ஐம்பதினாயிரம்பி சாசர் இனமாக இழுக்க இலங்கையில் உள்ளோர்கண் டேசுவார் மாருதியைப் பேசுவாரே |