332 திபதை -5 பைரவிராகம் ஆதிதாளம் கண்ணிகள் 1. வந்தது குரங்கு வந்ததிந்திரசித்தன் வலையில் மாட்டி என்பார் சிலபேர் இந்தஊருக் கெமனாகக் கோலங் கொண் டிருந்த குரங்கிது என்பார் சிலபேர் 2. வினைக்குரங்கு வந்ததெனச் சொல்லி ராவணன்கை வெகுமானம் கொள்வார் சிலபேர் தனக்கென்றிருக்கை யாலே சமயத்துக் காய்ச்சுதிந்த சதுமுகாஸ் திரம் என்பார் சிலபேர் 3. அந்தச்சிவனே சீதைக்காக இலங்கை தன்னை அழிக்கவந்தான் என்பார் சிலபேர் தந்தையை அண்ணனை மகனைக் கொன்றபழி தந்து போடா என்பார் சிலபேர் 4. மணவாளனைக் கொன்ற இவனைக் கொன்றால் ஒழிய வாங்கோம் மங்கிலியம் என்பார் சிலபேர் கணையாம் பாசத்தால் முகத்தில் வாட்டமில்லை சபட்டுக் குரங்கி தென்பார் சிலபேர் 5. அகப்பட்ட குரங்கிதை விட்டால் இலங்கை நகர்க் சனர்த்த காலம் என்பார் சிலபேர் நகத்தாற் கிள்ளுவதைக் கோடாலியால் வெட்ட நமக்கு முடியுமோ என்பார் சிலபேர் 6. இங்கே இந்திரசித்துப் பிடியா விட்டால் இன்னம் என்ன செய்யுமோ என்பார் சிலபேர் தங்கை மூக்கும் போன தகப்பனுக்கு மூக்கு தந்தானே மகன் என்பார் சிலபேர் |