பக்கம் எண் :

333

இராவணன் கொலுவில் வீற்றிருத்தல்

விருத்தம்-23

முனைசேர் அரக்கர் இவ்வாறு முறையிட்டலறச் சேனைசுற்றி
இனமாய் வளைக்க மலைபோலே இலங்கை அழித்த குரங்கிதென்றே
அனுமான் தனைக்கொண்டிந்திர சித்தன் அங்கேவிட எங்கேயென்று
புனைமா முடிராவணன் கண்டுபொரிந்தான் கொலுவில் இருந்தானே

தரு-18

அசாவேரிராகம்                               ஆதிதாளம்

பல்லவி

     வீரசூர ராவணன் கொலுவீற்றிருந்தானே       (வீர)

அநுபல்லவி

பேராத ரத்தின சிங்கா சனம்மேலே          சொர்ண
     பீடத்தில் மைந்நாக மலைபோலே துன்ன
சாருதயம் சேர்பத்து சூரியர்கள்         என்ன
     தலைபத்திலும் பத்து மகுடங்கள்   மின்ன     (வீர)

சரணங்கள்

1. நடமாடும் ரம்பையும் ஊர்வசியும் அபி
     நயங்காட்டி மயில்போலு              லாவ
  கடல்போலே மேளதாளங்கள் அண்ட
     கடாகம் மட்டும் சென்று               தாவ
  அடடா இந்திராவாடா சந்திரா வாடாஎன்
     றவசரக் காரர்கள்                   கூவ
  வடவாக்கினியான விரகாக்கினிதீர
     வந்து மேகம் பனிநீர்                தூவ

சுடர்மணி மண்டபம் அண்டகூடமதைத் தொடவே
     தொடைநடுங்கி அமரரெல்லாம் நெடுமூச்சுவிடவே
முடிகளொடு முடிமோதி அடியிணை புண்படவே
     மூவுலகத் துள்ளோரும் சேவடிக்கும் பிடவே    (வீர)

2. எப்போதென்று முகம் திரும்பிய வர்க்கெல்லாம்
     ரிஷிகள் வந்து தலை                 நீட்ட