334 தப்பா எட்டானைக் கொம்பொடித்தது பதினாறு சந்திரன் போல் மார்பிலே காட்ட வைப்பாகிய நாகராசாக்கள் மாணிக்க மாலை கொண்டடிமேலே சூட்ட வெப்பான துர்முகன் முதலான மந்திரிகள் விநய யோசனைகள்பா ராட்ட முப்பத்து முக்கோடி தேவரும் கொண் டாட முதலான தும்புரு நாரதர்கீதம் பாட கற்பகம் மென்மலர்மாரி குப்பைகள் போலே போட கட்டியம் சொல்ஓசை திசைஎட்டிலும் மேலே ஓட (வீர) 3. இனமாம் மேகங்கள் புகைபோல் ஒதுங்கிக்கொண் டிரைச்சல் இடாமலே கூச புனைமாமுக லட்சுமிகரந் துடைப்பார் போலப் பூவையர் கவரிகள் வீச எனைநாடினான் எனைப்பார்த்தான் வார்த்தை சொன்னான் என்றியக்கர் சந்தோஷம் பேச தினம் ஊழியத்துக்கு வரும் தெய்வப் பெண்களை சிறுக்கியர் போல் அரக்கியர்கள் ஏச முனைபெரும் அட்சதன் வீழ்ந்த மனவேதை கூடி மூத்தமகன் செயித்துவந்த கீர்த்தியைக் கொண்டாடி அனுமான் வருகிற வார்த்தை தனையே நாடி அடிக்கடி சீதையை எண்ணி துடித்துடன் மனம் வாடி (வீர) ----- அனுமானை ராவணன் வினாவுதல் விருத்தம்-24 இருந்தரா வணன் முன்பாக இருந்தமா ருதியை நோக்கி பெருங் குரங்குருவாய் வந்தாய் பிரமன்மால் சிவன் விட்டாரோ வருந்தி வானவர் விட்டாரோ மனத்துள கபட்டை எல்லாம் தெரிந்திட விடடாஎன்று சீறுவான் கூறுவானே |