பக்கம் எண் :

335

தரு-19

செஞ்சுருட்டிராகம்                         ஆதிதாளம்

பல்லவி

     ஆரடா குரங்கே - இங்கே வந்தநீ
     ஆரடா குரங்கே                         (ஆர)

அநுபல்லவி

ஆரடா குரங்கே அறிவாயோ லங்கையை
வாரசிங் காசனம்போல்-வால்இட் டென்னிலும்மேல் இட்டிருக்கிறாய்  (ஆர)

சரணங்கள்

1. அச்சம் இல்லாமல்       அடங்கிச் சொல்லாமல்
     நிச்சய வனகிங்கிரர்    நிறுத்தனில்லாமல்
  நிசாசரர்களும்           அசோக வனமும்
     திசா திசையில் விழ    வீசிஎறிந்தநீ          (ஆர)

2. கம்பத்தின் மேலே       காலனைப் போலே
     செம்பு மாலியையும் சேனாதிபரையும் கொன்றொருக்காலே
  சிட்சைசெய் வேனென்று கட்சியுடனே வந்த
     அட்சதனைக் கூட     பட்சணம் செய்தநீ      (ஆர)

3. நிந்தனை சீச்சி          நீயொரு பூச்சி
     இந்திரசித்தன் உன்னோ டெதிர்த்ததென்ன கண்காட்சி
  இடிக்கவோ கட்டி அடிக்கவோ பல்லாற்
     கடிக்கவோ ரத்தம் குடிக்கவோ நீ            (ஆர)

4. மறைந் தொருகர்மம் வகுத்தஉன் மர்மம்
     அறிந்தல்லோ கொல்லவேணும் அதற்குள் கொல்லல் தர்மம்
  அல்லடா நெஞ்சு    கல்லடா நிசம்
     சொல்லடா பொட்டெனச் சொல்லடாநீ        (ஆர)

------

அனுமார் இராவணனுக்கு விடையும் மதியும் கூறல்

விருத்தம்-25

அடல்இரா வணன் இந்த வார்த்தை சொல்ல
     அரன் அயன்மால் விடுக்க வந்தேன் அல்லகண்டாய்