336 மடமயில் சீதையைத் தேடி வந்தேன் கண்டாய் வந்திடத்தில் உனைக்காண வேண்டி உன்ஊர் இடமுடைய அசோகவனம் அழித்தேன் கண்டாய் இராகவன் தூதுவன் நானே நீபிழைக்கக் கெடல்அரிய புத்திகேள் கண்டாய் என்றே விளம்புவான் அனுமன்எதிர் விளம்புவானே தரு-20 மோகனராகம் அடதாளசாப்பு பல்லவி ராமசாமி தூதன் நான்அடா-அடடராவணா நானடா என்பேர் அனு மானடா (ராமா) அநுபல்லவி மாமலர் தலைவாசனும் கயிலாசனும் ரிஷிகேசனும் மறைந்துநின்று தந்தநான் அல்லடா புறம்பே நின்று வந்தநான் அல்லடா (ராமா) சரணங்கள் 1. கொடுத்த வரமும் தனமும் கனகமும் வீணிலே ஏன் போக்கிறாய் குடிக்கும்பாலை ஐயையோ கமர் வெடிக்குளேஏன் வார்க்கிறாய் துடுக்குடன் பரஸ்திரி செனங்களைத் தொடர்ந்தேன்பழி ஏற்கிறாய் தூக்கி ஏறவிட் டேணியை வாங்கும் தூர்த்தர் வார்த்தையைக்கேட்கிறாய் தடைபடாமல்என் அய்யன்கால் மீதே சரண்என்றால் பிழைப்பாயே இப் போதே அடக்கஉன்தரம் அல்லடா சீதை அவன்இவன்விட வந்தான்என் னாதே (ராம) 2. காலமும் பலமும் தெரியாமல் குதிக்கிறாய்என்ன மாயமோ காமத்தாலே தர்மபுத்தியை கடக்கிறாய்இதுஉ பாயமோ சாலமோ கேடு காலமா அடாஉனக்கும் தெய்வச காயமோ தங்கை மூக்கறுப் புண்டதல்லவோ சண்டாளாஇது ஞாயமோ வாலியும் போனான் உன்னைச் சிறை வைத்த வாலும் போய்விட்டது அஞ்சாதே மெத்த |