பக்கம் எண் :

337

சீலராகவன் அம்பால் அவன்      செத்த    
     சேதியை நீயறி யாயோடா   பித்த      (ராம)

3. கீதம் தெரிந்தும் வேதம் தெரிந்தும் பாதங்களைச் சூழ்கிறாய்
     கெடுமதி கண்ணுக்குத் தோன்றாமல் படுநரகத்தில்    மூழ்கிறாய்
  மாதர் மோகத்திலே துவண்டு தாழாதவரைத் தாழ்கிறாய்
     மயக்கமோ கைக்குள் விளக்கைப் பிடித்துக்கிணற்றிலேஏன்வீழ்கிறாய்

     ஆதிமூர்த்திதானே              உத்தண்ட
          மாகவந்தான் அரக்         கரைமண்ட
     சீதையை விட்டுப்பிழை           அடாகண்ட
          சேதியைச்சொன்னேன்வீர    கோதண்ட (ராம)

-----

இதுவுமது

தரு-21

பைரவி ராகம்                            ஆதிதாளம்

பல்லவி

     பிழைக்க என்றால் வாடா - நான் சொன்ன
     பேச்சைக் கேளடா மூடா                   (பிழை)

அநுபல்லவி

     பழிக்கெல்லாம் நீதானே     ஆளா
     படைத்துக் கொண்டாயோ சண் டாள         (பிழை) 

சரணங்கள்

1. வேதன்முதல் விண்ணோர்கள்        குறைநீங்க-ஆதி
     விஷ்ணுவே புவனமெல்          லாம் தாங்க-ஒரு
  கோதண்ட ராமன்எனும்             பேர்ஓங்க-வந்து
     குதித்தானே சரத்தால் உன்       உயிர்வாங்க

  ஆதவன் முன்இருள்               கிட்டுமோ-முட
     வனுக்குக் கொம்புத்தேன்         எட்டுமோ-அந்த
  சீதையாம் தெய்வம் உனக்           கொட்டுமோ இந்தத்
     திருட்டுப் புத்தி தலைக்          கட்டுமோ-தப்பி (பிழை)