பக்கம் எண் :

338

2. வினை செய்வதற்கும் செய்யும்       வகைஏதோ-ராமன்
     வீடுங்கணை ஒன்றுனக்குப்        போதாதோ-மிக
  இனிதாநான் சொல்லுவதெல்         லாம் தீதோ-சற்றும்
     இணக்கம் இல்லாத உன்         னுடன் வாதோ

  உனது தங்கை கொங்கை            போய் அடா-பாவி
     உனக்கிதன் மேலென்ன          வாய் அடா-அந்த
  சனகி உலகெல்லாம்                தாய் அடா-அவள்
     தானே உன்குலம்சுடும்           தீயடா-தப்பி (பிழை)

3. புவிமேல் உன்னை வென்ற          கார்த்தவீரன்-விழப்
     புடைத்தானே பரசுராமன்         எனும்சூரன் எதிர்த்
  தவனையும் வென்றரகு              குலதீரன்-தேவி
     அவளை விட்டால் நீலங்கைக்     கதிகாரன்

  தவறில்லாத வரத்தோ               டகஸ்தியமுனி-முன்னம்
     தந்தவில்லுக்குன் சேனை          வெய்யிற்பனி-அங்கே
  எவர்களுக்கும் ஏழை                ஆனதனி-நான்
     எனக்கு மிஞ்சும் வானரர்          அனேகர்இனி-தப்பி (பிழை)

------

அனுமாரைக் கொல்லாமல் ராவணனை விபீஷணர்

விலக்குதல்

விருத்தம்-26

    போதரவா அனுனிந்த புத்தி சொல்லப்
         பொங்கிய வாளரக்கண்விழிப் பொறிகள் சிந்தி
    நீதிவசனம் குரங்கே நீயோ சொல்வாய்
         நேத்தியிது நேத்தியிது என்று சீறிப்
    பாதகரால் இவனைவெட்டும் என்றான் ஆங்கே
         பணிந்துவிபீ ஷணன் அண்ணேன் பாவம் கண்டாய்
    தூதரைக்கொல் லுவதென்று ஞாயம் சொல்லித்
         துலக்குவான் ராவணனை விலக்குவானே

தரு-22

சாவேரிராகம்                             ஆதிதாளம்

பல்லவி

     இவனைக் கொல்லுவேன் என்று - நீஎழுந்தது மெத்த
     இகழ்ச்சிடா அண்ணேன்                        (இவ)