பக்கம் எண் :

339

அநுபல்லவி

     தவந்தானே மிகுந்த    இலங்கேசனே அந்த
     சாதிமனிதன் சொந்தத்  தூதுவன் என்றுவந்த        (இவ)

1. துசங்கட்டும் கீர்த்திக்கு    அழிவுவந்ததிப்       போதோ
     தூதனைக் கொல்வேனென்று துடிக்கிறாய்என்ன சூதோ
  கொசுவைப் பொருட்டாஎண்ணி கருடன் எதிர்ப்ப  தேதோ
     குரங்கைநீ எதிரிட்டால் புறம்பெங்கும் நகை    யாதோ (இவ)

2. அந்நாள்நம் தங்கையைக் கொல்லாமல் நரர்      தாமே
     அவர்பலம் வெளியாக அனுப்பின தறிந்       தோமே
  இந்நாள் நமதுபலம் வெளியாம் என்றெண்ணி      நாமே
     இந்தக் குரங்கைக் கொன்றால் எங்கெங்கும் வசை ஆமே (இவ)

3. பொறுக்காக் கோபம் வந்தாலும் குரங்கை கொல்வதோ  சத்தி
     புலிபசித் தாலும்என்னை புல்லைத்தின்னுமோ       நத்தி
  அறிக்கை செய்தேன் இனி நீயே அறிவாய்            புத்தி
    ஆக்கினை செய்தப்பாலிதை அகற்றுவதுவே         வெற்றி(இவ)

------

அனுமார் வாலில் தீசுடாமல் அக்கினியை சீதை வேண்டல்

விருத்தம்-27

    தம்பிவி பீஷணன் சொல ராவணனும் கேட்டான்
          தையலார் தாலியிலே கயிறில் லாமல்
    வம்புபடு கயிறெல்லாம் முறுக்கிச் சுற்றி
          வாலிலே கிழிசுற்றித் தீயை இட்டான்
    முன்பிருநூ றாயிரம்பேர் இழுத்தோர் வீழ
          முனைத் தெழுந்த அனுமந்தன் தனைத்தொடாதே
    பொன்பொறிபோ லேயிருப்பாய் நெருப்பே என்று
          போற்றுவாள் சீதைசொல்லி ஆற்றுவாளே

தரு-23

ஆனந்தபைரவி ராகம்                          ஆதிதாளம்

பல்லவி

     அக்கினி பகவானே-வருத்தாதே         (அக்கி)
     அனுமானை நீதானே