340 அநுபல்லவி திக்குவேறில்லை நீயே திக்கு, புடவை சோர்ந்தால் கைக்குண்டோ உபசாரம் காக்க உனதுபாரம் (அக்கி) சரணங்கள் 1. இத்திசைவந்தானே-என்பிராணேசன்கை-முத்திரை தந்தானே சத்தியமாகச் சர்வ சாட்சிநீ தானே யானால் பத்தினி மார்க்குள் மேலாம் பத்தினிநானே ஆனால் (அக்கி) 2. விவரித்துள்ளது சொல்லவோ-உனதுமித்திரன் தவபுத்திரன்இவனல்லவோ கவலை அரக்கர் இரு கண்ணுக்கெல்லாம் நெருப்பாய் இவனுடைய வாலுக்குமாத்திரம் மலர்போல் இருப்பாய் (அக்கி) 3. தன்மத்தைக் குறியாயோ ராமதூதன் என்றின்னமும் அறியாயோ முன்னாள் என்சாமிகையை உன்னால் அல்லவோ தொட்டேன் இந்நாளும் நான் அவர்கை இணங்க வைப்பாய் கும்பிட்டேன் (அக்கி) ----- அனுமார் இலங்கையைக் கொளுத்துதல் விருத்தம்-28 கோடையிலே கசங்குகிற மலர்போற் சீதை குழைந்து குழைந்திவ்வாறு புலம்பி ஏங்கி வாடயிலே அக்கினியும் பயந்து செம்பொன் மலர்போல வேயிருந்தான் நாலுதிக்கும் ஆடரங்கும் சாலையும் மூலைகளும் தோப்பும் அரசிருப்பும் திண்ணைகளும் படுக்கை வீடும் மாடமும் கூடமும் இலங்கை எங்கும் வாலை வளர்த்தினான் அனுமந்தன் கொளுத்தினானே தரு-24 தோடிராகம் ஆதிதாளம் பல்லவி பற்றிக் கொண்டது அனுமான் இட்டஅனல் சுற்றிக்கொண்டது லங்கையை (பற்றி) |