341 அநுபல்லவி வெற்றிப்பெண் சானகி உறைமரம் ஒன்றும் விட்டுநீங்கித் திசை எட்டும் ஓங்கி முட்டி (பற்றி) சரணங்கள் 1. எடுத்தபொற்கோ புரங்களும்-மலர் படுத்த பூஞ்சப் பரங்களும்-எரி அடுக்களையும்தா வரங்களும்-சுவர் கொடுத்த மணியுத் தரங்களும் உன்னதஉப் பரிகையும்-தங்கத்தாலே மின்னிய கொடி வகையும்-ஆனை சேனை மன்னும் விமானத் தொகையும்-நவரத்தினம் பொன்னறைகளும் குகையும்-திகுதிகென கொண்டல் கொண்டலாப் புகை ஏறவே-அத்தை கண்டவர் சீவன்விட்டு மாறவே-அவர் பெண்டுபிள்ளைகள் பழி கூறவே-பெண்கள் கொண்டைகள் எல்லாம்சுறு நாறவே உருவங்கள் தாறுமாறாப் பருவங்கள் வேறுவேறா அருகெங்கும் கீறுகீறாத் தெருவெங்கும் நீறுநீறாய் (பற்றி) 2. மூதெயில் வளைந்து சொலிக்கவே-படும் வாதை கண்டமரர் சலிக்கவே-சொல்லும் வேதசாஸ்திரங்கள் கெலிக்கவே-எங்கள் சீதை சொன்னபடி பலிக்கவே சாகரங்களும் குறைய-புகைப்படலம் ஆகாயம் மட்டும் நிறைய-பாதாளத்தில் நாகரும் கூட இறைய-ராவணனும் மேகதலத்தில் மறைய-இலங்கையிலே கிணற்று நீரும் சுண்டி வற்றவே-செத்த பிணத்தின் வெடிநாற்றங்கள் சுற்றவே-வாலை வணங்கி எழுந்தெழுந்து மெத்தவே-செந் தணல் பொறியாக அய்யன் ஏற்றவே புரவி எல்லாம் உவிய நிருதாரல்லாம் அவிய எரிஎரியாக் கவிய கரிகரியாக் குவிய (பற்றி) |