பக்கம் எண் :

342

3. கைக்குழந்தைகளைப்          போடுவார்-பெற்ற
  மக்களை விட்டுவிட           டோடுவார்-புகைச்
  சிக்கினிலே தள்ள             மாடுவார்-ஒரு
  மிக்க அரக்கியர்              வாடுவார்

மலர்ச்சோலை பொரிந்த          தென்பார்-ராவணன்
கொலுக் கூடம் எரிந்த           தென்பார்-வீட்டின்மேல்வீடா
நிலத்தோடே சரிந்த             தென்பார்-வெட்டவெளியாத்
தலைக்கடை தெரிந்த            தென்பார்-தவிதவித்து

     வேலைக்குள் ஓடிவிழச்      சொல்லுவர்-பெண்கள்
     மூலைக்கு மூலைவாயை     மெல்லுவார்-அனல்
     மேலிட்டி டாமற்குழி        கெல்லுவார்-அனுமான்
     வாலுக்குத் தெண்டனென்று   சொல்லுவார்

மாடகூடம் அனேக கோடி கோடி நீறாக
மேடுமேடாகிப் போகக் காடுகாடாகி வேக     (பற்றி)

-----

வானர வீரர்கள் திரும்புகாலையில் மதுவனம் அழித்தல்

விருத்தம்-29

அக்கினியை இலங்கையில்இவ் வாறிட்டுச் சீதைநிலைஅறிந்து போற்றி
மைக்கடல் வாய் மைநாகம் தனைக்கண்டான் சேனைகளை வணங்கிக்
                                                 கொண்டான்
புக்கதுசொல் அனுமானும் அங்கதனும் சேனைகளும் போய்ச்
                                                 சுக்கிரீவன்
தக்கமது வனங்கண்டு நிலைப்பட்டார் மதுவை உண்ணத் தலைப்பட்டாரே
 

தரு-25

அசாவேரி ராகம்                              அடதாளசாப்பு

பல்லவி

வானவீரரெல்லாம் பாய்ந்தாரே-மது
வனமெல்லாம் கொள்ளையிடடு மேய்ந்தாரே   (வான)