343 அநுபல்லவி வானும் சூரியபக வானும் தெரியா அந்த தானத்தினில் மிகுந்த தேனும் கனியும் சிந்த (வான) சரணங்கள் 1. திரளதான மாங் கனியும்-ஆ சினிபழுத்த தேங் கனியும்-தேன் உருகு கதலிப் பூங் கனியும்-சுவை ஒழிபடா விளாங் கனியும்-கையால் திருகித் திருகிப் பறிக்கத்-திசைதிசை பெருகிப் பெருகித் தெறிக்க-வழிமேல் வரும் இளைப்பினால் வந்தடைக்கவே இருவிலாப் புற மும் புடைக்கவே (வானர) 2. வாயிலே அளிப்பார் சிலபேர்-தேன் வாயிலே தெளிப்பார் சிலபேர் வாயிலே விளிப்பார் சிலபேர்-கடை வாயிலே துளிப்பார் சிலபேர் ஈக்கள் மொய்த்தாற் போலே-மொய்த்து இரைச்ச லிட்டொருக் காலே-பெரு வாயிலே மதுவை வழியக் குதட்டிக் கொண்டு ஓயநின்றவரைஉறுமி அதட்டிக் கொண்டு (வானர) 3. இந்திரன் வாலிக்கிட்ட தோட்டம்-இப்ப இதிலே சுக்கிரீவர்க்கு நாட்டம்-என்று வந்து புகுந்து கடல் ஓட்டம்-போலும் மதுவை எல்லாம் குடித் தாட்டம்-செய்ய அந்தவேளை ததிமுகன் எதிர்க்க-அவனை அடித்தானே அங்கதன் பதைக்க-சொல்லும் எந்தஆணை ஆக்கினைக்கும் நில்லாமலே தந்தம் இச்சையில் தடை இல்லாமலே (வானர) |