345 ஸ்ரீராமருக்கு அனுமார் சீதையின் இருப்புக் கூறல் விருத்தம்-31 வண்டே போல் மனஞ்சுழல் இந்த வண்ணம் மடலேபோல் சுக்கிரீவ னுடனே சொல்லிக் கொண்டே தென் முகத்தினிலே முகத்தை வைத்துக் குறித்து ராகவன் இருந்த சபைக்கு முன்னே பண்டே அங்கதன் முதற் சேனைகள்பின் செல்லப் பறந்து வந்து கரங் குவித்துப் பணிந்து கண்டேன் கண்டேன் சீதையை என்றுகூவிக் கூவிக் கதிகொண்டான் அனுமன்வந்து குதிகொண்டானே தரு-26 முகாரி ராகம் அடதாளசாப்பு பல்லவி கண்டேன் கண்டேன் சீதையைக் கண்டேன் ராகவா (கண்) அனுபல்லவி அண்டருங் காணாத இலங்காபுரத்திலே அரவிந்த வேதாவைத் தரவந்த மாதாவை (கண்) சரணங்கள் 1. காவி விழிகளில் உன் உருவெளி மின்னக் கனிவாய் தனிலேஉன் திருநாமமே பன்ன ஆவித்துணையைப் பிரிந்த மட அன்னம் ஆனாள்நான் சொல்லுவ தென்ன பூவைத் திரிசடை நித்தம்நித்தம் சொன்ன புத்திவழியே தன் புத்திநிலை மன்னப் பாவி அரக்கியர் காவல் சிறைதுன்னப் பஞ்சு படிந்தப ழஞ்சித்திரம் என்ன (கண்) 2. பனிக்கால வாரிசம் போல நிறங்கூசிப் பகல்ஒரு யுகமாகக் கழித்தாளே பிரயாசி நினைத் தங்கே ராவணன் அந்நான் வரச் சீசி நில்லடா சன் டாளா என்றேசி தனித்துத்தன் உயிர்தன்னைத் தான்விட மகராசி சாரும்பொழுது காணும் சமய மிதுவே வாசி |