பக்கம் எண் :

346

  இனித்தா மதம் செய்யல்   ஆகாதென்றிடர் வீசி
     ராமராம ராமா        ராமஎன்றெதிர் பேசி   (கண்)

3. அடல்சேரும் வாலியை   வானுலகிலே கூட்டி
     அவனியைச் சுக்கிரீவன் ஆளமுடி சூட்டி
  உடனேநீ தூதுபோ       என்றசொல் அமுதூட்டி
     உன்எழில்           ... .... ... பாராட்டி
  விடவந்த அனுமந்தன்         நான்என்று சீராட்டி
     விவரம் சொல்ல உயிர்கொண் டிருக்கிறாள் சீமாட்டி
  திடமா லட்சுமணன் செய்த பானசாலை வீட்டில்
     தேவாதி தேவா உன்   திருவாழிதனைக் காட்டி (கண்)

-----

ஸ்ரீராம சீதாதேவி சூடாமணி கண்டு மகிழ்தல்

கொச்சகம்-3

பணியனுமான் இதுசொல்லிப் பாவைஉத வியசூடா
மணியடையா ளங்கொடுத்தான் வள்ளலிரா கவன்கண்டான்
அணிஉடலம் புளகித்தான் அகங்குளிர்ந்தான் முகம்மலர்ந்தான்
துணியும்அந்த மணிவாங்கித் துதித்தான்சம் மதித்தானே

தரு-27

சாவேரிராகம்                             அடதாளசாப்பு

பல்லவி

     சூடாமணிகண் டபோதே-சாமிக்கு வந்த
     சுகமே அனந்த சுகம்                 (சூடா)

அநுபல்லவி

வாடி அனுமான் சொல்ல    ஆடி முட்டமுட்ட
நாடிச் சீதையம்மை         சூடி வரவிட்ட   (சூடா)

சரணங்கள்

1. அமல மாமணிதன்னை         வாங்கினான்-உயிர்செய்
     அமுர்த சஞ்சீவிபோல்      தாங்கினான்-சீதை
  கமலக் கைபோற்பிடித்         தோங்கினான்-கவலை
     கதிர்கண்ட பனிபோல்      நீங்கினான்-கண்டு
  கண்ணிரண்டும்               குளிர்ந்தான்-மேல்வரும்
  எண்ணங்களும்               தெளிந்தான்-அத்த (சூடா)