பக்கம் எண் :

347

2. மடித்து வாயிதழ்         கடித்தான்-மேனி
     மயிர்ப் புளகம்        பொடித்தான்-வேர்வை
  பொடிக்கத்துடி           துடித்தான்-அனுமான்
     புத்தி சொல்லிப்       படித்தான்-சேனையை
  போர்க்குச் செல்லும்      என்றான்-அடிக்கடி
  சேர்க்கச் சொல்லும்       என்றான்-இப்படி      (சூடா)

3. அரக்கராம் இருளெல்லாம் ஓடவே-தர்மம்
     ஆனபயிர் வளர்ந்து   கூடவே-கீர்த்தி
  விரித்தரம்பையர் கீதம்    பாடவே-தேவர்
     வீசும் பூமலர் எங்கும்  மூடவே-வரவர
மேனிபூ                  ரிக்கவே-துர்க்காப
வானிபூ                  ரிக்கவே-அந்த        (சூடா)

------

ஸ்ரீராமர் தென்சமுத்திரக் கரையைக் காணுதல்

விருத்தம்-32

    இந்தவண்ணம் சாமிமனம் மகிழ்ந்து தேறி
           இலங்கையைப் போய் வளைத்திடவே சேனைசூழ
    அந்த அனுமான் மேலேதானும், தம்பி
          அங்கதன்தோள் மேலும் எழுந்தருளிச் சென்று
    தொந்தமுள்ள படைத்தலைவர் முன்னும் பின்னும்
           சூழ்ந்துவரச் சுக்கிரீவன் அருகேநின்று
    முந்திவழி காட்டியிட ராமச்சந்திரன்
           முறைகொண்டான் தென்கடலின் கறைகண்டானே

-----

சுந்தரகாண்டம் முற்றிற்று
விருத்தம்-32. கொச்சகம்-3. திபதைகள்-6. தருக்கள்-27
சக்கிரவர்த்தித் திருமகனார் திருவடிகளே சரணம்.