348 உ ஐந்தாவது சுந்தரகாண்டம் (கம்பராமாயண ஒப்புமைப் பகுதி) அனுமார் கடல் தாண்டப் பாய்தல் விருத்தம்-1 - தரு-1 ஆண்டகை ஆண்டவ் வானோர் துறக்கநா டருகிற் கண்டான் ஈண்டிது தான்கொல் வேலை இலங்கையென்று ஐயம் எய்தா வேண்டரு விண்ணா டென்னும் மெய்ம்மைகண் டுள்ளம் மீட்டான் காண்டரு கொள்கை உம்பர் இல்லெனக் கருத்துட் கொண்டான் மொய்யுறு செவிகள்தாவி முதுகுற முறைகால் தள்ள மையறுவிசும் பினூடு நிமிர்ந்தவா லதியமஞ்சின் மெய்யுறத் தழீஇய மெல்லென பிடியொடும் வெருவலோடும் மையுற மரங்கள் பற்றிப் பிளிறின களிநல் யானை பொன்பிறழ் சிமயக்கோடு பொடியுறப் பொடியும்சிந்த மின்பிறழ் குடுமிக் குன்றம் வெரிந்உற விரியும்வேலை புன்புற மயிரும் பூவாக் கண்புலம் புறத்துநாறா வன்பறழ் வாயிற்கௌவி வல்லியம் இரிந்த மாதோ மாவொடு மானும் மண்ணும் வல்லியும் மற்றும் எல்லாம் போவது புரியும் வீரன் விசையினாற் புணரி போர்க்கத் தூவின கீழும்மேலும் தூர்த்தன சுருதியன்ன சேவகன் சீறாமுன்னம் சேதுவும் இயன்ற மாதோ இடுக்குறு பொருள்கள்என்னாம் எண்டிசை சுமந்த யானை நடுக்குற விசும்பிற்செல்லும் நாயகன் தூதன் நாகம் ஒடுக்குறு காலை வன்காற்று அடியொடும் ஒடித்த அந்நாள் முடுக்குறக் கடலிற்செல்லும் முத்தலைக் கிரியும் ஒத்தான் கொட்புறு புரவித் தெய்வக் கூர்நுதி குலிசத்தாற்கும் கட்புலன் கதுவலாகா வேகத்தான் கடலும் மண்ணும் உட்படக் கூடிஅண்டம் உறஉள செவியின் ஒற்றைப் புட்பக விமானந்தானவ் இலங்கைமேல் போவதொத்தான் |