பக்கம் எண் :

349

தடக்கைநா லைந்துபத்துத் தலைகளும் உடையான்தானே
அடக்கிஐம் புலன்கள்வென்ற தவப்பயன் அறுதலோடும்
கெடக்குறி யாகமாகம் கிடிக்கெழு வழக்கு நீங்கி
வடக்கெழுந் திலங்கைசெல்லும் பருதிவானவனும்ஒத்தான்

வெளித்துப்பின் வேலைதாவும் வீரன்வால் வேதம் ஏய்க்கும்
அளித்துப்பின் அனுமன் என்றோர் அருந்துணை பெற்றதாயும்
களித்துப்புன் தொழில்மேல் நினற் அரக்கர் கண்ணுறுவரா மென்று
ஒளித்துப்பின் செல்லும்கால பாசத்தை ஒத்ததன்றே

ஓசனை உலப்பிலாத உடம்பமைந் துடைய என்னத்
தேசமும் நூலும் சொல்லும் திமிங்கில கிலங்களோடும்
ஆசையை உற்றவேலை கலங்க அன்று அண்ணல் யாக்கை
வீசிய காலின்வீந்து மிதந்தன மீன்க ளெல்லாம்
                 (கடல்தாவுபடலம் 1, 5, 6, 19, 23, 25, 28, 33, 37)

இலங்கணிவதை

விருத்தம்-2-தரு-2

இந்நாகம் அன்னான்ஏறிக் கால்என ஏகும் வேலைத்
திந்நாக மாவில்செறி கீழ்த்திசைக் காவல் செய்யும்
கைந்நாக அந்நாள்கடல் வந்ததோர் காட்சிதோன்றக்
கைந்நாகம் என்னும்மலை வானுற வந்ததன்றே

நீர்மேற் படரா நெடுங்குன்று நிமிர்ந்து நிற்றல்
சீர்மேற் படராதென சிந்தை உணர்ந்து செல்வான்
வேர்மேற்பட வன்தலை கிழ்ப்பட தூக்கி விண்ணோர்
ஊர்மேற் படரக் கடிது உம்பரின் மீதுயர்ந்தான்

ஈண்டே கடிதேகி இலங்கை விலங்கல் எய்தி
ஆண்டான் அடிமைத் தொழிலாற்றி என்ஆற்றல் கொண்டே
மீண்டால் நுகர்வென் நின்விருந்து எனவேண்டி மெய்ம்மை
பூண்டானவன் கட்புலம்பின்பட முன்புபோனான்

வெங்கார் நிறப்புணரி வேறேயும் ஒன்றுஅப்
பொங்கார் கலிப்புனல் தரப்பொலிவ தேபோல்
இங்கார் கடத்திர்எனை என்னா எழுந்தாள்
அங்காரதாரை பெரிது ஆலாலம் அன்னாள்