பக்கம் எண் :

350

திறந்தாள் எயிற்றையவள் அண்ணல் இடைசென்றான்
அறந்தான் அரற்றியது அயர்த்தமரர் எய்த்தார்
இறந்தான் எனக்கொடு ஓர் இமைப்பதனின் முன்னம்
பிறந்தான் எனப்பெரிய கோளரி பெயர்ந்தான்
                          (கடல்தாவுபடலம் 39, 42, 51, 63, 70)

நாணாளும் தான் நல்கிய காவல் நனிமூதூர்
வாணாள் அன்னாள் போவதின் மேலே வழிநின்றாள்
தூணாம் என்னும் தோளுடையானைச் சுடரோனைக்
காணாவந்த கட்செவி என்னக்கனல் கண்ணாள்

எல்லாம் உட்கும் ஆழிஇலங்கை இகல் மூதூர்
நல்லாள் அவ்வூர் வைகுறை ஓக்கும் நயனத்தாள்
நில்லாய் நில்லாய் என்றுரை நேரா நினையாமுன்
வல்லே சென்றாள் மாருதிகண்டான் வருகென்றான்

கொல்வாம் அன்றேல் கோளுறும் இவ்வூர் எனல்கொண்டாள்
வெல்வாய் நீயேல் வேறிஎனத்தன் விழிதோறும்
வல்வாய் தோறும் வெநுகனல் பொங்க மதிவானில்
செல்வாய் என்னா மூவிலை வேலைச் செலவிட்டாள்

அடியாமுன்னம் அங்கையனைத்தும் ஒருகையால்
பிடியா என்னே பெண்இவள் கொல்லின் பிழை என்னா
ஒடியா நெஞ்சத்து ஓரடிகொண்டான் உயிரோடும்
இடியேறுண்ட மால்வரை போல்மண்ணிடை வீழ்ந்தாள்

ஐயகேள் வையம் நல்கும் அயனருள் அமைதியாக
எய்தியிம் மூதூர் காப்பென் இலங்கைமா தேவிஎன்பேர்
செய்தொழில் இழுகினாலே திகைத்திந்தச் சிறுமை செய்தேன்
உய்தி என்றளித்தியாயின் உணர்த்துவல் உண்மை என்றாள்

எத்தனைக் காலம்காப்பல் யானிந்த மூதூர் என்றுஅம்
முத்தனை வினவினேற்கு முரண்வலிக் குரங்கொன்றுன்னைக்
கைத்தலம் அதனாற்றீண்டிக் காய்ந்த அன்றென்னைக் காண்டி
சித்திரநகரம் பின்னைச் சிதைவது திண்ணம் என்றான்

அன்னதே முடிந்ததைய அறம்வெல்லும் பாவம் தோற்கும்
என்னுமீ தியம்பவேண்டும் தகையதோ இனிமற்றுன்னால்