பக்கம் எண் :

351

உன்னிய எல்லாம் முற்றும் உனக்கும் முற்றாததுண்டோ
பொன்னகர் புகுதி என்னாப் புகழ்ந்தவள் இறைஞ்சிப் போனால்
                            (ஊர்தேடுபடலம் 73, 79, 85, 89, 91, 93)

அனுமார் இலங்கையில் சீதையைத் தேடுதல்

விருத்தம்-3 - தரு-3

ஆத்துறு சாலைதோறும் ஆனையின் கூடந்தோறும்
மாத்துறு மாடந்தோறும் வாசியின் பந்திதோறும்
காத்துறு சோலைதோறும் கருங்கடல் கடந்த தாளான்
பூத்தொறும் வாவிச் செல்லும் பொறிவரி வண்டிற் போனான்

இயக்கியர் அரக்கிமார்கள் நரகியர் எஞ்சில் விஞ்சை
முயல்கறை இலாத திங்கள் முகத்தியர் முதலினோரை
மயக்கற நாடியேகும் மாருதி மலையின் வைகும்
கயக்கமில் துயிற்சிக் கும்பகருணனைக் கண்ணிற்கண்டான்

குறுகிநோக்கி மற்றவன் தலைஒருபதும் குறித்த
இறுகுதிண்புயம் இருபதும் இவற்குஇலை என்னா
மறுகி ஏறிய முனிவெனும் வடவை வெங்கனலை
அறிவெனும் பெரும்பரவை யம்புனலினால் அவிந்தான்

மாடகூடங்கள் மாளிகைஒளிகை மகளிர்
ஆடரங்குகள் அம்பலம் தேவர் ஆலயங்கள்
பாடல் வேதிகை பட்டிமண்டபம் முதல்பலவும்
நாடிஏகினன் இராகவன் புகழ்எனும் நலத்தான்

மணிகொள் வாயிலில் சாளரத் தளங்களில் மலரில்
கணிகொள் நாளத்தில் காலெனப் புகையெனக் கலக்கும்
நுணுகும் வீங்கும் மற்றவன்நிலை யாவரே நுவல்வார்
அணுவில் மேருவில் ஆழியான் எனச்செலும் அனுமன்

ஏந்தல் இவ்வகை எவ்வழி மருங்கினும் எய்திக்
காந்தள் மெல்விரல் மடந்தையர் யாரையும் காண்பான்
வேந்தர் வேதியர் மேலுளோர் கீழுளோர் விரும்பப்
போந்தபுண்ணியன் கண்ணகன் கோயிலுட் புக்கான்

பளிக்குவேதிகைப் பவளத்தின் கூடத்துப் பசுந்தேன்
துளிக்கும் கற்பகப் பந்தரில் கருநிறத் தோர்பால்