பக்கம் எண் :

352

வெளித்து வைகுதல் அரிதென அவர் உருமேவி
ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான் தனையுற்றான்

முந்தரம் பையர் முதலினர் முழுமதி முகத்துச்
சிந்துரம் பயில் வாய்ச்சியர் பலரையும் தெரிந்து
மந்திரம் பலகடந்து தன்மனத்தின் முன்செல்வான்
இந்திரன் சிறையிருந்த வாயிலின் கடைஎதிர்ந்தான்

வளையும் வாளெயிற் றரக்கனோ கணிச்சியான் மகனோ
அளையில் வாளரி யனையவன் யாவனோ அறியேன்
இளைய வீரனும் ஏந்தலும் இருவரும் பலநாள்
உளைய உள்ளபோர் இவனொடும் உளதுஎன உணர்ந்தான்

இன்னராம் பெரும்படைத்தலைவர்கள் இருக்கைப்
பொன்னின் மாளிகை ஆயிரகோடியும் புக்கான்
கன்னிமாநகர்ப் புறத்து அகன்கரந்துறை காண்பான்
சொன்ன மூன்றினுள் நடுவணது அகழியைத் தொடர்ந்தான்

கரிய நாழிகை பாதியில் காலனும்
வெருவி ஓடும் அரக்கர்தம் வெம்பதி
ஒருவனே ஒரு பன்னிரு யோசனைத்
தெருவு மும்மைநூ றாயிரம் தேடினான்

ஆயபொழுதம் மதிலகத்து அரசர் வைகும்
தூயதெரு ஒன்றோடு ஒருகோடி துருவிப்போய்த்
தீயவன் இருக்கை அயல்செய்த அகழ் இஞ்சி
மேயது கடந்தனன் வினைப்பகையை வென்றான்
   (ஊர்தேடுபடலம் 99, 119, 129, 131-134, 136, 139, 143, 155, 164)

அனுமார் இராவணனைக் கண்டு கோபித்தல்

விருத்தம்-4-தரு-4

போரியற்கை இராவணன் பொன்மனை
சீரியற்கை நிரம்பிய திங்களா
தாரகைக் குழுவின் தழுவித் தொடர்
நாரியர்க் குறைவாம் இடம் நண்ணினான்
ஆயவிஞ்சையர் மடந்தையர் உறைவிடம்
                 ஆறிரண்டமைகோடித்