பக்கம் எண் :

353

தூயமாளிகை நெடுந்தெருத் துரூவிப்போய்
     தொலைவில் மூன்றுலகிற்கும்
நாயகன் பெருங் கோயிலை நண்ணுவான்
     கண்டனன் நளிர்திங்கள்
மாயநந்திய வாள்முகத் தொருதனி
     மயன்மகள் உறை மாடம்

இன்ன தன்மையின் எழில்மணி விளக்கங்கள்
     எழில்கெடப் பொலிகின்ற
தன்ன தின்னொளி தழைப்புறத் துயில்வுறு
     தைய லைத் தகைவில்லான்
அன்னளாகிய சானகி இவள்என அயிர்த்து
     அகத்தெழு வெந்நீதீ
துன்னும் ஆருயிர் உடலொடு சுடுவதுஓர்
     துயருழந்திவை சொன்னான்

மானுயர்த் திருவடிவினள் அவள், இவள்
     மாறுகொண்டனள் கூறின்
தானியக்கியோ தானவர் தையலோ
     ஐயுறுந்தகையானாள்
கானுயர்த்த தார் இராமன் மேல்நோக்கிய
     காதல் காரிகையார்க்கு
மீனுயர்த்தவன் மருங்குதான் மீளுமோ
     நினைந்தது மிகை என்றான்

குழவி ஞாயிறு குன்றிவர்ந்த தனையன
     குருமணி நெடுமோலி
இழைகளோடு நின்றிள வெயில் ஏறித்திட
     இரவெனும் பெயர் வீய
முழைகொள் மேருவின் முகட்டிடைக் கனகனை
     முறுக்கிய முரண்சீயம்
தழைகொள் தோளொடு தலைபல பரப்பிமுன்
     துயில்வதோர் தகையானை

கண்டனன் காண்டலோடும் கருத்தின்முன் காலச்செந்தீ
விண்டன கண்கள் கீண்டு வெடித்தன கீழும் மேலும்