354 கொண்டதோர் உருவம் மாயோன் குறளினும்குறுக நின்றான் திண்தலை பத்தும் தோள்கள் இருபதும் தெரியநோக்கி தோளாற்றல் என்னாகும் மேல்நிற்கும் சொல்என்னாம் வாளாற்று கண்ணாளை வஞ்சித்தான் மணிமுடியென் தாளாற்றலால் இடித்துத் தலைபத்தும் தகர்த்தின்றென் ஆளாற்றல் காட்டேனேல் அடியேனாய் முடியேனே நடித்துவாழ் தகைமையதோ அடிமைதான் நன்னுதலைப் பிடித்துவாழ் அரக்கனார் யான்கண்டும் பிழைப்பாரோ ஒடித்துவான் தோளனைத்தும் தலைபத்தும் உதைத்துருட்டி முடித்திவ்வூர் முடித்தால் மேல்முடிவதெலாம் முடிந்தொழிக என்றூக்கி எயிறுகடித்து இருகரனும் பிசைந்தெழுந்து நின்றூக்கி உணர்ந்துரைப்பான் நேமியோன பணியன்றால் ஒன்றூக்கி ஒன்றிழைத்தல் உணர்வுடைமைக் குரித்தன்றால் பின்தூக்கின் இதுசாலப் பிழைபயக்கும் எனப்பெயர்ந்தான் (ஊர்தேடுபடலம் 165, 193, 197, 199, 205, 216, -219) அனுமார் சீதையைக் காணாததால் இரங்குதல் விருத்தம்-5 - திபதை-1 ஆலம்பார்த் துண்டவன்போல் ஆற்றலமைந்துளர் எனினும் சீலம்பார்க்க உரியோர்கள் எண்ணாது செய்பவோ மூலம்பார்க்குறின் உலகைமுற்றுவிக்கும் முறைத்தெனினும் சாலம்பார்த் திறைவேலை கடவாத கடல்ஒத்தான் இற்றைப் போர்ப் பெருஞ்சீற்றம் என்னோடு முடிந்திடுக கற்றைப் பூங்குழலாளைச் சிறைவைத்த கண்டகனை முற்றப்போர் முடித்தது ஒருகுரங்கென்றால் முனைவீரன் கொற்றப் போர்ச்சிலைத் தொழிற்குக் குறைவுண்டாம் எனக்குறைந்தான் என்றெண்ணி ஈண்டினியோர் பயனில்லை எனநினையாக் குன்றன்ன தோளவன்றன் கோமனைபிற்படப் பெயர்ந்தான் நின்றெண்ணி உன்னுவான் அந்தோ இந்நெடுநகரில் பொன்துன்னும் மணிப்பூணாள் இலளென்ன பொருமுவான் கொன்றானோ கற்பழியாக் குலமகளைக் கொடுந்தொழிலால் தின்றானோ எப்புறத்தே செறித்தானோ சிறை சிறியேன் |