355 ஒன்றானும் உணரகிலேன் மீண்டினிப்போய் என்னுரைக்கேன் பொன்றாத பொழுதெனக்கிக் கொடுந்துயரம் போகாதால் கண்டுவரும் என்நிருக்கும் காகுத்தன் கவிகுலக்கோன் கொண்டுவரும் என்றிருக்கும் யானிழைத்த கோளிதுவால் புண்டரிக நயனத்தான் பாலினியான் போவேனோ விண்டவரோடு உடன்வீயாது யான்வாளா விளிவேனோ கண்ணியநாள் கழிந்துளவால் கண்டிலமால் கனங்குழையை விண்ணடைதும் என்றாரை ஆண்டிறுத்தி விரைந்தயான் எண்ணியது முடிக்கிலேன் யான்முடியா திருப்பேனோ புண்ணியம் என்றொருபொருள் என்உழைநின்றும் போயதால் ஏழுநூறு ஓசனைசூழ்ந்து எயில்கிடந்த இவ்இலங்கை வாழுமா மன்னுயிர் யான்காணாத மற்றில்லை ஊழியான் பெருந்தேவி ஒருத்தியுமே யான்காணேன் ஆழிதாய் இடராழி இடையேவீழ்ந்து அழிவேனோ வல்லரக்கன் தனைப்பற்றி வாயாரக் குருதியுகக் கல்லரக்கும் கரதலத்தால் காட்டென்று காண்கேனோ எல்லரக்கும் அயில்நுதிவேல் இராவணனும் இவ்வீரும் மெல்லரக்கின் உருகிஉக வெந்தழலான் வேய்கேனோ வடித்தாய்பூங் குழலாளை வானறிய மண்ணறிய பிடித்தான் இவ்அடலரக்கன் எனும்மாற்றம் பிழையாதால் எடுத்தாழி இலங்கையினை இருங்கடலிட் டின்றிவனை முடித்தாலே யான்முடிதல் முறைமன்ற என்றுணர்வான் (ஊர்தேடுபடலம் 220, 221, 223, 228, 231) அனுமார் சீதையைக் காணுதல் விருத்தம்-6 - தரு-5 மாடுநின்ற அம்மணிமலர்ச் சோலையை மருவி தேடிஇவ்வழிக் காண்பனேல் தீரும் என்சிறுமை ஊடுகண்டிலேன் எனின் பின்னர் உரியதொன்றில்லை வீடுவேன் மற்றிவ் விலங்கல்மேல் இலங்கையைவீட்டி அவ்வயின் அரக்கியர் அறிவுற் றம்மவோ செவ்வையில் துயில்நமைச் செகுத்ததீதென |