பக்கம் எண் :

356

எவ்வயின் மருங்கினும் எழுந்து வீங்கினார்
வெவ்வயில் மழுஎழு சூலவெங்கையார்

விரிமழைக் குலங்கிழித்து ஒளிரும் மின்எனக்
கருநிறத் தரக்கியர் குழுவிற் கண்டனன்
குருநிறத் தொருதனிக் கொண்டல் ஆம்எனத்
திருவுருப் பொலியும் ஓர்செல்வன் தேவியை

கடக்கரும் அரக்கியர் காவல் சுற்றுளாள்
மடக்கொடி சீதையாம் மாதரேகொலாம்
கடல்துணை நெடியதன் கண்ணின் நீர்ப்பெருந்
தடத்திடை இருந்ததோர் அன்னத் தன்மையாள்

என்அரும் உருவின்அவ் இலக்கணங்களும்
வள்ளல்தன் உரையொடும் மாறுகொண்டில
கள்ளவா ளரக்கன் அக்கமலக் கண்ணனார்
உள்ளுறை உயிரினை ஒளித்து வைத்தவா

மூவகை உலகையும் முறையின் நீங்கிய
பாவிதன் உயிர்கொள்வான் இழைத்த பண்பிதால்
ஆவதே ஐயம்இல் அரவின்நீங்கிய
தேவனேஅவன் இவள்கமலச் செல்வியே

வீடினதன்றறன் யானும் வீகலேன்
தேடினென் கண்டனென் தேவியேஎனா
ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும் பாய்ந்து
ஓடினன் உலாவினன் உவகைத் தேனுண்டான்
                           (காட்சிப்படலம் 1, 55, 59-63)

சீதாதேவி திரிசடையோடு முறையிடல்

விருத்தம்-7 - திபதை-2

அரிது போகவோ விதிவலி கடத்தல் என்றஞ்சிப்
பரிதி வானவன் குலத்தையும் பழியையும் பாரா
சுருதிநாயகன் வரும்வரும் என்பதோர் துணிவால்
கருதிமாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள்

கண்டிலன் கொலாம் இளவலும் கனைகடல் நடுவண்
உண்டிலங்கை என்றுணர்ந்திலர் உலகெலாம் ஒருப்பான்