357 கொண்டிறந்தமை அறிந்திலராம் எனக்குழையா புண்திறந்ததில் எரிநுழைந் தாலெனப் புகைவாள் மாண்டுபோயினன் எருவைகட் கரசன் மற்றுளரோ யாண்டைஎன்நிலை அறிவுறுப்பார்கள் இப்பிறப்பில் காண்டலோ அரிதுஎன்றுஎன்று விம்முறும் கலங்கும் மீண்டுமீண்டுபுக் கெரிநுழைந்தா லென மெலிவால் என்னைநாயகன் இளவலை எண்ணலா வினையேன் சொன்ன வார்த்தைகேட் டறிவிலள் எனத்துறந்தானோ முன்னைஊழ்வினை முடிந்ததோ என்றென்றும் முறையால் பன்னிவாய் புலர்ந்துணர்வு தேய்ந்தாருயிர் பதைப்பாள் அருந்தும் மெல்லடகு ஆரிடஅருந்தும் என்றழுங்கும் விருந்துகண்டபோ தென்னுறுமோ என்று விம்மும் மருந்தும்உண்டுகொல் யானுற்ற நோய்க்கென்று மயங்கும் இருந்த மாநிலம் செல்லரித்திடவும் ஆண்டெழாதாள் வன்கண் வஞ்சனை அரக்கர் இத்துணைப் பகல்வையார் தின்பர் என்இனிச் செயத்தக்கது என்று தீர்ந்தானோ தன்குலப் பொறை தன்பொறை எனத் தணிந்தானோ என்கொல் எண்ணுவேன் என்றுடங் கிராப்பகலில்லாள் பெற்றதாயரும் தம்பியும் பெயர்த்தும் வந்தெய்திக் கொற்ற மாநகர்க் கொண்டிறந்தார்களோ குறித்துச் சொற்ற ஆண்டெலாம் நிறைந்தன்றி அந்நகர்துன்னான் உற்றதுண்டெனாப் படருடிந்துறாதன உறுவாள் முரன்எனத்தகும் மொய்ம்பினோர் முன்பொருதவர்போல் வரனும் மாயமும் வஞ்சமும் வரம்பில வல்லோர் பொரநிகழ்ந்ததோர் பூசலுண்டாம்? எனப்பொருமா கரன் எதிர்ந்தது கண்டனள் ஆம்எனக் கவல்வாள் தெம்மடங்கிய சேணிலம் கேகயர் தம்மடந்தை உன்தம்பிய தாம்என மும்மடங்கு பொலிந்த முகத்தினன் வெம்மடங்கலை உன்னி வெதும்புவாள் |