393 பச்சைமேனி புலர்ந்து பழிபடூஉம் கொச்சை ஆண்மையும் சீர்மையிற் கூடுமோ புரம்பிழைப்பரும் தீப்புகப் பொங்கியோன் நரம்பிழைத்த நின்பாடலின் நல்கிய வரம்பிழைக்கும் மறைபிழை யாதவன் சரம்பிழைக்கும் என்றெண்ணுதல் சாலுமோ ஈறில் நாண்உக எஞ்சலில் நற்றிரு நூறி நொய்தினை ஆகி நுழைதியோ வேறும் இன்னும் நகையாம் வினைத்தொழில் தேறினார்பலர் காமிக்கும் செவ்வியோய் ஆதலால் தன்அரும்பெரும் செல்வமும் ஓதுபல் கிளையும் உயிரும் பெறச் சீதையைத்தருக என்றுஎனச் செப்பினான் சோதியான் மகன் நிற்கெனச் சொல்லினான் (பிணிவீட்டுப்படலம் 86, 88, 91, 94, 98, 99, 101)
அனுமாரைக் கொல்லாமல் ராவணனை விபீஷணர் விலக்குதல் விருத்தம்-26 - தரு-22 என்னும் மாத்திரத்து ஈண்டெரி நீண்டுக மின்னும் வாளெயிற்றன் சினம்வீங்கினான் கொல்மின் என்றனன் கொல்வியர் சேர்தலும் நில்மின் என்றனன் வீடணன் நீதியான் அந்தணன் உலகம்மூன்றும் ஆதியின் அறத்தின் ஆற்றல் தந்தவன் அன்புக்கான்ற தவநெறி உணர்ந்து தக்கோய் இந்திரன் கருமம்ஆற்றும் இறைவன்நீ இயம்புதூது வந்தனென் என்றபின்னும் கோறியோ மறைகள் வல்லாய் பூதலப் பொருப்பின் அண்டப் பொகுட்டினுள் புறத்துள் பொய்தீர் வேதமுற்றியங்கு வைப்பின் வேறுவேறிடத்து வேந்தர் மாதரைக் கொலைசெய்தார்கள் உளர் எனவரினும் வந்த தூதரைக்கொன்று ளார்கள் யாவரே தொல்லை நல்லோர் பகைப்புலன் நணுகிஉய்த்தார் பகர்ந்தது பகர்ந்து பற்றார் மிகைப்புலன் அடக்கி மெய்மை விளம்புதல் விரதம் பூண்ட
|