பக்கம் எண் :

394


தகைப்புலக் கருமத்தோரைக் கோறலின் தக்கார் யார்க்கும்
நகைப்புலன் பிறிதொன்றுண்டே நங்குலம் நவையின்றாமே?

முத்தலை எஃகன்மற்றை முராந்தகன் முனிவன் முன்னா
அத்தலை நம்மைநோனா அமரர்க்கும் நகையிற்றாமால்
எத்தலை உலகும் காக்கும் வேந்த நீவேற்றோர் ஏவ
இத்தலை எய்தினானைக் கொல்லுதல் இழுக்கம் இன்னும்

இளையவள் தன்னைக் கொல்லாது இருசெவி மூக்கொடீர்ந்து
விளைவுரை என்றுவிட்டார் வீரராய் மெய்ம்மை ஓர்வார்
களைதியேல் ஆவிநம்பால் இவன்வந்து கண்ணின் கண்ட
அளவுரை யாமல் செய்தியாதி என்று அமையச் சொன்னான்
                                (பிணிவீட்டுப்படலம் 105, 107-111)

அனுமார் வாலில் தீசுடாமல் அக்கினியைச் சீதை வேண்டல்

விருத்தம்-27 - தரு-23 


நல்லது உரைத்தாய் நம்பிஇவன் நவையே செய்தான் ஆனாலும்
கொல்லல் பழுதே போயவரைக் கூறிக் கொணர்தி கடிதென்னா
தொல்லை வாலை மூலமறச் சுட்டுநகரைச் சூழ்போக்கி
எல்லை கடக்க விடுமின்கள் என்றான் நின்றார் இரைத்தெழுந்தார்

மண்ணிற்கண்ட வானவரை வலியின் கவர்ந்த வரம்பெற்ற
எண்ணற்கரிய ஏனையரை இகலின் பறித்த தமக்கியைந்த
பெண்ணிற்கிசையும் மங்கலத்தில் பிணித்தகயிறே இடைபிழைத்த
கண்ணிற் கண்டவன்பாசம் எல்லாம் இட்டுக்கட்டினார்

வேந்தன் கோயில் வாயிலொடு விரைவிற்கடந்து வெள்ளிடையில்
போந்து புறம்நின் றிறைக்கின்ற பொறைதீர் மறவர் புறஞ்சுற்ற
ஏந்து நெடுவால் கிழிசுற்றி முற்றும்தோய்த்தார் இழுதெண்ணெய்
காந்து கடுந்தீக் கொளுத்தினார் ஆர்த்தார் அண்டம் கடிகலங்க

ஆர்த்தார் அண்டத்தப் புறத்தும் அறிவிப்பார்போல் அங்கோடிங்கு
ஈர்த்தார் முரசம் எற்றினார் இடித்தார் தெழித்தார் எம்மருங்கும்
பார்த்தார் ஓடிச் சானகிக்கும் பகர்ந்தார் அவளும் உயிர்பதைத்தாள்
வேர்த்தா லுலந்தாள் விம்மினாள் விழுந்தா ளழுதாள்வெய்துயிர்த்தாள்

தாயேஅனைய கருணையான் துணையை ஏதும் தகவில்லா
நாயே அனைய வல்லரக்கர் நலியக் கண்டால் நல்காயோ