பக்கம் எண் :

395

நீயே உலகுக் கொருசான்று நிற்கேதெரியும் கற்பதனில்
தூயேன் என்னின் தொழுகின்றேன் எரியே அவனைச் சுடல்! என்றாள்
                       (பிணிவீட்டுப்படலம் 112, 115, 118, 121, 122)

அனுமார் இலங்கையைக் கொளுத்துதல்

விருத்தம்-28 - தரு-24

மற்றினிப் பலஎன் வேலை வடஅனல்புவி அளாய
கற்றைவெங் கனலிமற்றைக் காயத்தீ முனிவர்காக்கும்
முற்றுறு மும்மைச் செந்தீ முப்புரம் முருங்கச் சுட்ட
கொற்றவன் நெற்றிக் கண்ணின் வன்னியும் குளிர்ந்தவன்றே

வெற்பினால் இயன்ற அன்ன வாலினை விழுங்கி வெந்தீ
நிற்பினும் சுடாது நின்ற நீர்மையை நினைவில்நோக்கி
அற்பின்றார் அறாதசிந்தை அனுமனும் சனகன்பாவை
கற்பினால் இயன்ற தென்னப் பெரியதோர் களிப்பன் ஆனான்

துன்னலர் புரத்தை முற்றும் சுடுதொழில் தொல்லையோனும்
பன்னின பொருளும் நாணப் பாதகர் இருக்கை பற்ற
மன்னனை வாழ்த்திப் பின்னை வயங்கெரி மடுப்பென் என்னா
பொன்னகர் மீதேதன்போர் வாலினைப் போகவிட்டான்
                            (பிணிவீட்டுப்படலம் 124, 126, 130)

கொடியைப் பற்றி விதானம் கொளுத்தியே
நெடியதூணைத் தழுவி நெடுஞ்சுவர்
முடியச் சுற்றி முழுதும் முறுக்கிற்றால்
கடிய மாமனை தோறும் கடுங்கனல்

வாசல் இட்ட எரிமணி மாளிகை
மூசமுட்டி முழுதும் முருக்கலால்
ஊசலிட்டென ஓடி உலைந்துளை
பூசலிட்ட இரியல் புரமெலாம்

வானத்தை நெடும்புகை மாய்த்தலால்
போனதிக் கறியாது புலம்பினார்
தேனகத்த மலர்பல சிந்திய
கானகத்து மயில் அன்ன காட்சியார்