பக்கம் எண் :

396

நீலம் நின்ற நிறத்தன கீழ்நிலை
மாலின் வெஞ்சின யானையை மானுவ
மேல் விழுந்தெரி முற்றும் விழுங்கலால்
தோலுரிந்து கழன்றன தோல்எலாம்

பொடித் தெழுந்த பெரும்பொறி போலவன்
இடிக்குலங்களின் வீழ்தலும் எங்கணும்
வெடித்தவேலை வெதும்பிட மீன்குலம்
துடித்து வெந்து புலர்ந்துயிர் சோர்ந்தவால்

பருகுதீ மடுந் துள்ளுறப் பற்றலால்
அருகுநீடிய ஆடக தாரைகள்
உருகி வேலையின் ஊடுழக்குற்றன
திருகு பொன்னெடுந் தண்டின் திரண்டவால்

பூக்கரிந்து முறிபொறியாய் அடை
நாக்கரிந்து சினைநறும் சாம்பராய்
மீக்கரிந்து நெடும்பணை வேர்உறக்
காக்கரிந்து கருங்கரி யானவே

தளைகொளுத்திய தாவெரி தாமணி
முளைகொளுத்தி முகத்திடை மொய்த்தபேர்
உளைகொளுத்த உலந்துலை வுற்றன
வளைகுளப்பின் மணிநிற வாசியே

எழுந்து பொற்றலத்து ஏறலின் நீள்புகைக்
கொழுந்து சுற்ற உயிர்ப்பிலர் கோளுற
அழுந்து பட்டுளர் ஒத்து அயர்ந்தார் அழல்
விழுந்து முற்றினர் கூற்றை விழுங்குவார்

கோசிகத் துகில் உற்ற கொழுங்கனல்
தூசின் உத்தரி கத்தொடு சுற்றுரு
வாசமைக்குழல் பற்ற மயங்கினார்
பாசிழைப் பரவைப்படர் அல்குலார்

பஞ்சரத்தொடு பசுங்கிளி வெந்துபதைப்ப
அஞ்சனக் கண்ணின் அருவிநீர் முலைமுன்றில் அலைப்ப
குஞ்சரத்தன்ன கொழுநரைத் தழுவுறும் கொதிப்பால்
மஞ்சிடைப் புகும்மின்னென புகையிடை மறைந்தார்