397 அகருவும் நறுஞ்சாந்தமும் முதலிய அனேகம் புகரில் நல்மரத்து உறுவெறி உலகெலாம் போர்ப்பப் பகரும் ஊழியில் கால வெங்கடுங் கனல்பருகும் மகர வேலையின் வெந்தன நந்தன வனங்கள் கரிந்து சிந்திடக் கடுங்கனல் தொடர்ந்து உடல்கதுவ உரிந்த மெய்யினர் ஓடினர் நீரிடை ஒளிப்பார் விரிந்த கூந்தலும் குஞ்சியும் மிடைதலின் தானும் எரிந்து வேகின்றது ஒத்தது எறிதிரைப் பரவை மருங்கின்மேல் ஒருமகவு கொண்டு ஒருதனிமகவை அருங்கையாற் பற்றி மற்றொருமகவு பின்அரற்ற நெருங்கி நீண்டிடு நெறிகுழல் சுறுக்கொள நீங்கிக் கருங்கடல் தலைவீழ்ந்தனர் அரக்கியர் கதறி வில்லும் வேலும் வெம்குந்தமும் முதலிய விறகாய் எல்லுடைச் சுடர்எனப் புகர் எஃகெலாம் உருகித் தொல்லை நன்னிலை தொடர்ந்த பேருணர் வன்ன தொழிலால் சில்லி உண்டையின் திரண்டன படைக்கலத் திரள்கள் நீரைவற்றிடப் பருகி மாநெடுநிலந் தடவித் தாருவைச் சுட்டு மலைகளைத்தழல் செய்து தனிமா மேருவைப்பற்றி எறிகின்ற காலவெங் கனல்போல் ஊரை முற்றுவித்து இராவணன் மனைபுக்கது உயர்தீ சூழும்வெஞ்சுடர் தொடர்ந்திட யாவரும் தொடரா ஆழிவெஞ்சினத்து ஆண்தொழில் இராவணன் மனையில் ஊழிவெங் கனல்உண்டிட உலகமென்றுயர்ந்த ஏழும் வெந்தென எரிந்தன நெடுநிலை ஏழும் அனைய காலையில் அரக்கனும் அரிவையர் குழுவும் புனைமணிப்பொலி புட்பக விமானத்துப் போனார் நினையும் மாத்திரை யாவரும் நீங்கினர் நினையும் வினையிலா மையின் வெந்ததவ் விலங்கல் மேல் இலங்கை (இலங்கை எரியூட்டுபடலம் 1, 2, 5, 8, 10, 11, 16-19, 21, 23, 27,28, 29, 32, 35, 37) |