398 வானரவீர்கள் திரும்புகாலையில் மதுவனம் அழித்தல் விருத்தம்-29 - தரு-25 மைந்நாகம் என்னநின்ற குன்றையும் மரபின் எய்தி கைந்நாகம் அனையோன் உற்றது உணர்த்தினன் கணத்தின்காலை பைந்நாகம் நிகர்க்கும் வீரர்தன் நெடு வரவு பார்க்கும் கொய்ந்நாகம் நறந்தேன் சிந்தும் குன்றிடைக் குதியும் கொண்டான் தேனொடு கிழங்கும் காயும் நறியன அரிதின்தேடி மேல்முறை வைத்தேம் அண்ணல் நுகர்ந்தனை மெலிவு தீர்தி மானவாண் முகமே நங்கட்கு உரைத்தது மாற்றம் என்று தாம் நுகர் சாகமெல்லாம் முறைமுறை சிலவர்தந்தார் வாலிகாதலனைமுந்தை வணங்கினன் எண்கின் வேந்தை காலுறப் பணிந்து பின்னை கடன்முறை கடவோர்க்கெல்லாம் ஏலுறஇயற்றி ஆங்கணிருந்து இவணிருந்தோர்க்கெல்லாம் ஞாலநாயகன் தேவி சொல்லினள் நன்மை என்றான் (திருவடி தொழுத படலம் 2, 5, 7) அங்கதன் தன்னை அண்மி அனுமனும் இருகை கூப்பி கொங்குதங்கு அலங்கல் மார்ப் நின்னுடை குரக்குச் சேனை வெங்கதம் ஒழிந்து சால வருந்தின வேடை ஓடி இங்கிதற் களித்தல் வேண்டும் இறாலுமிழ் பிரசம் என்றான் நன்றென அவனும் நேர்ந்தான் நரலையும் நடுங்க ஆர்த்துச் சென்றுறு பிரசந்தூங்கும் செழுவனம் அதனினூடே ஒன்றின்முன் ஒன்று பாயும் ஒடிக்கும் மேன்பிரசமெல்லாம் தின்றுதின் றுவகை கூரும் தேன்நுகர் அளியின் மொய்த்தே முனியுமாம் எம்மைஎங்கோன் என்றவர் மொழிந்து போந்து கனியும் மாமது வனத்தைக் கட்டழித் திட்டதின்று நனிதரு கவியின்தானை நண்ணலார் செய்கைநாண இனிஎம்மால் செயலின் றென்னா ததிமுகற் கியம்பினாரே கேட்டவன் யாவரேஅம் மதுவனம் கேடுசூழ்ந்தார் காட்டிர் என்றெழுந்தான் அன்னார் வாலிசேய் முதலகற்றோர் ஈட்டம் வந்திறுத்ததாக அங்கதன் ஏவல்தன்னால் மாட்டின கவியின்தானை மதுவளர் உலவை ஈட்டம் (மிகைப்பாடல்கள் 11-3, 4, 7, 8) |