பக்கம் எண் :

399

சீதையைத் தேடப்போனவர்களைக் குறித்து ஸ்ரீராமர் இரங்கல்

விருத்தம்-30 - திபதை-6

குறித்தநாள் இகந்தன குன்றத் தென்திசை
வெறிக்கருங் குழலியை நாடல் மேயினார்
மறித்திவண் வந்திலர் மாண்டுளார் கொலோ
பிறித்தவர்க் குற்றுள தென்னை பெற்றியோய்

மாண்டனள் அவள் இவள்மாண்ட வார்த்தையை
மீண்டவர்க் குரைத்தலின் விளிதல் நன்றுஎனாப்
பூண்டதோர் துயர்கொடு பொன்றி னார்கொலோ
தேண்டினர் இன்னமும் திரிகின் றார்கொலோ

கண்டனர் அரக்கரை கறுவு கைம்மிக
மண்டமர் தொடங்கினார் வஞ்சர் மாயையால்
விண்டலம் அதனில் மேயினர்கொல் வேறுஇலாத்
தண்டலில் நெடுஞ்சிறைத் தளைப்பட்டார் கொலோ

கூறின நாளவர் இருக்கை கூடலம்
ஏறல் அஞ்சுதும் எனஇன்ப துன்பங்கள்
ஆறினார் அருந்தவம் அயர்கின் றார்கொலோ
வேறவர்க் குற்றதென் விளம்புவாய் என்றான்
                            (திருவடிதொழுதபடலம் 17-20)

ஸ்ரீராமருக்கு அனுமார் சீதையின் இருப்புக் கூறல்

விருத்தம்-31 - தரு-26

என்புழி அனுமனும் இரவி என்பவன்
தென்புறத் துளன்எனத் தெரிவ தாயினான்
பொன்பொழி தடக்கையப் பொருவில் வீரனும்
அன்புறு சிந்தையன் அமைய நோக்கினான்

எய்தினன் அனுமன் எய்தி ஏந்தல்தன்
மொய்கழல் தொழுகிலன் முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன் கையினன்
வையகம் தழீஇ நெடி திறைஞ்சி வாழ்த்தினான்

கண்டனென் கற்பினுக் கணியைக் கண்களால்
தெண்டிரை அலைகடல் இலங்கைத் தென்னகர்