பக்கம் எண் :

400

அண்டர் நாயக இனித் துறத்தி ஐயமும்
பண்டுள துயரும் என்று அனுமன் பன்னுவான்

உன்பெருந்தேவி என்னும் உரிமைக்கும் உன்னைப் பெற்ற
மன்பெரு மருகி என்னும் வாய்மைக்கும் மிதிலைமன்னன்
தள்பெருந்தனயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றான்
என்பெருந் தெய்வம் ஐயா இன்னமும் கேட்டி என்பான்

உன்குலம் உன்னதாக்கி உயர்புகழ்க் கொருத்தியாய
தன்குலம் தன்னதாக்கித் தன்னைஇத் தனிமை செய்தான்
வன்குலம் கூற்றுக் கீந்து வானவர் குலத்தை வாழ்வித்து
என்குலம் எனக்குத்தந்தாள் என்இனிச் செய்வதெம் மோய்

விற்பெருந் தடந்தோள் வீர வீங்குநீர் இலங்கை வெற்பில்
நற்பெருந் தவந்தளாய நங்கையைக் கண்டேன் அல்லேன்
இற்பிறப் பென்பதொன்றும் இரும்பொறை என்பதொன்றும்
கற்பெனும் பெயரதொன்றும் களிநடம் புரியக்கண்டேன்

கண்ணினும் உளைநீ தையல் கருத்தினும் உளைநீ வாயின்
எண்ணினும் உளைநீ கொங்கை இணைக்குவை தன்னின் ஓவாது
அண்ணல் வெங்காமன் எய்த அலரம்பு தொளைத்த ஆறாப்
புண்ணினும் உளை நீ நின்னைப் பிரிந்தமை பொருந்திற்றாமோ

வேலையுள் இலங்கை என்னும் விரிநகர் ஒருசார் விண்தோய்
காலையும் மாலைதானும் இல்லதோர் கனகக் கற்பச்
சோலையங் கதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய
சாலையில் இருந்தாள் ஐய தவம் செய்த தவமாம் தையல்

தையலை வணங்கற் கொத்த இடைபெறும் தன்னை நோக்கி
ஐய, யான்இருந்த காலை அலங்கல் வேல்இலங்கை வேந்தன்
எய்தினன் இரந்துகூறி இறைஞ்சினன் இருந்தநங்கை
வெய்துரை சொல்லச் சீறிக்கோறல் மேற்கொண்டு விட்டான்

ஆயிடை அணங்கின் கற்பும் ஐயநின் அருளும்செய்ய
தூயநல் லறனும் என்றிங்கினையன தொடர்ந்து காப்ப
போயினன் அரக்கிமாரைச் சொல்லுமின் பொதுவின் என்றாங்
கேயினன் அவரெலாம் என்மந்திரத் துறங்கி யிற்றார்