பக்கம் எண் :

401

அன்னதோர் பொழுதில் நங்கை ஆருயிர் துறப்பதாக
உன்னினள் கொடிஒன் றேந்திக் கொம்பொடும் உறைப்பச்சுற்றி
தன்மணிக் கழுத்திற் சாத்தும் அளவையில் தடுத்துநாயேன்
பொன்னடி வணங்கிநின்று உன்பெயர் புகன்ற போழ்தில்

அறிவுறத் தெரியச்சொன்ன பேரடை யாளம்யாவும்
செறிவுற நோக்கி நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மை
முறிவற எண்ணி வண்ண மோதிரம் காட்டக் கண்டாள்
இறுதியின் உயிர்தந்தீயும் மருந்தொத்தது அனையது எந்நாய்

வாங்கிய ஆழிதன்னை வஞ்சர்ஊர் வந்ததாம் என்று
ஆங்குயர் மழைக்கண்ணீரால் ஆயிரம் கலசம் ஆட்டி
ஏங்கினள் இருந்தல்லால் இயம்பலள் எய்த்தமேனி
வீங்கினள் வியந்ததல்லால் இமைத்திலள் உயிர்ப்பு விண்டாள்
  (திருவடிதொழுதபடலம் 21, 22, 25, 26, 28, 29, 30, 31, 32,
                                       37,38, 39, 41, 43) 

ஸ்ரீராமர் சீதாதேவி சூடாமணி கண்டு மகிழ்தல்

கொச்சகம்-3 - தரு-27 

பையயப் பயந்தகாமம் பரிணமித் துயர்ந்து பொங்கி
மெய்யுற வெதும்பி உள்ளம் மெலிவுறு நிலையைவிட்டான்
ஐயனுக்கு அங்கிமுன்னர் அங்கையால் பற்றும்நங்கை
கையெனல் ஆயிற்றன்றே கைபுக்க மணியின்காட்சி

பொடித்தன உரோமம் போந்து பொழிந்தன கண்ணீர் பொங்கித்
துடித்தன மார்பும் தோறும் தோன்றின வியர்வின் துள்ளி
மடித்தது மணிவாய் ஆவிவருவது போவதாகித்
தடித்தது மேனிஎன்னே யார்உளர் தன்மைதேர்வார்
                                (திருவடிதொழுதபடலம் 47, 48)

ஸ்ரீராமர் தென்சமுத்திரக் கரையைக் காணுதல்

விருத்தம்-32

எழுகவெம் படைகள் என்றான் ஏஎனும் அளவில் எங்கும்
முழுமுரசு எற்றிக் கொற்ற வள்ளுவர் முக்கமுந்திப்
பொழிதிரை அன்னவேலை புடைபரந்த தென்னப் பொங்கி
வழுவலில் வெள்ளத்தானை தென்திசை வளர்ந்ததன்றே