பக்கம் எண் :

402

அந்நெறி நெடிதுசெல்ல அரிக்குலத் தரசனோடும்
நல்வெறிக்குமரர் போகநயந்து டன்புணர்ந்த சேனை
இந்நெடும் பழுவக் குன்றில் பகலெலாம் இறுத்தபின்னர்ப்
பன்னிரு பகலிற்சென்று தென்திசைப் பரவை கண்டார்
                               (திருவடிதொழுதபடலம் 50, 52)

என்றுரைத் தெழுந்தவேலை மாருதி இருகை கூப்பிப்
புன்தொழிற் குரங்கெனாது என்தோளிடைப் புகுதிஎன்னா
தன்தலைபடியிற் றாழ்ந்தான் அண்ணலும் சரணம் வைத்தான்
வன்திறள் வாலிசேயும் இளவலை வணங்கிச் சொன்னான்

நீஇனி என்றன் தோள்மேல் ஏறுதிநிமல என்ன
வாய்புதைத் திறைஞ்சி நின்ற வாலிகா தலனைநோக்கி
நாயகற் கிளையகோவும் நன்றென அவன்றன் தோள்மேல்
பாய்தலும் தகைப்பில் தானை படர்நெறிப் படர்ந்ததன்றே
                                (மிகைப்பாடல்கள் 49 - 2, 3)