பக்கம் எண் :

403

ஸ்ரீ

ஸ்ரீராமஜெயம்

ஆறாவது

உயுத்தகாண்டம்

அனுமார் மீண்டபின் ராவணன் கேட்க மந்திரிகள்

ஆலோசனை கூறல்

விருத்தம்-1

    ஆலிலைமேற் பள்ளிவிடுத் தயோத்தி வந்தோன்
          அருங்கடல் வாய்ப் பெருங்கவிகள் உடனிருந்தான்
    மூலஇலங் கையை முன்போல் விசுவகர்மா
          முடிக்க அந்தப்படிக்குரா வணனும் கண்டான்
    வாலிலும் காலிலும் அனுமான் இடுந்தீயாலும்
          மாண்டரா க்ஷிதர்போக அந்த ஊரில்
    மேலுளரா க்ஷதருக்கும் அரக்கன் பொல்லா
          வினைசெய் வான் மந்திராலோ சனைசெய் வானே.

திபதை-1

சங்கராபரண ராகம்                    அடதாளசாப்புத் தாளம்

கண்ணிகள்

1. வாரும் வாரும் பாரும்பிரிய         மதிமந்திரிமாரே
  பாருப் பாரும் ராவணன்எனைப்      பார்த்தென்ன சொல்வீரே

2. அரிஅயன்கூடப் பயப்படும் இலங்    காபுரித் தெருமேலே
  கரிகரியாக் குவியக்குவிய            கண்டோமே குரங்காலே

3. இங்கே சுட்ட சூடாறவில்லையே      இலங்கையில் நாலுசாரும்
  நங்கையர் கொண்டைவெந்திடச்சுறு    நாறுகின்ற துபாரும்

4. மனிதர் அனுப்பக் குரங்கிக்கேவர     மாண்டதரக்கர் கூட்டம்
 இனிஎன்ன வெற்றி இனியென்னசத்தி   இனியென்னகொண்டாட்டம்

5. என்ன ராவணன் சொல்லச் சீறி      எழுந்தானே உன்மத்தன்
  நன்னிக்குரங்கும் கொசுகும்பகையோ   நமக்கென்றானே பிரகத்தன்

6. ஒருவர் எதுக்கு நானே லட்சுமண்ன்   உடனே அவன் அண்ணன்
  இருவர் தலையும் கொண்டுவருவேன்  என்றானே புகைக்கண்ணன்