பக்கம் எண் :

405

அநுபல்லவி

ஏற்கும் கும்பகர்ணன் என்சொல்லை வீழ்க்கிறாய்
     எடுப்பான கீர்த்தியைத் துடுக்காலே தாழ்க்கிறாய்
சூத்தில் அடிக்கவே வாயிற்பல் போச்சு தென்ற
     சொல்லைப் போலே இந்தத் தூர்த்தர்சொல் கேட்கிறாய் (நேத்)

சரணங்கள்

1. தேட்டமாம் அசோகவனம் அழிபட்டபோதே
     தேவருக்கும் உனது                  பயம்போச்சே
  நாட்டமாம் அரக்கர்தலைகள் உன்னாலே தெரு
     நாலுபுறமும் உருண்                  டிடல் ஆச்சே
  வீட்டுப் பெண்கள் நகைக்க ஒருத்தி காலடியினில்
     வீழ்கிறாய் இதிலும் உண்              டோ ஏச்சு
  கோட்டை முழுதும்கரிக் கோட்டை செய்தகருங்
     குரங்குக்கும் மனிதர்க்கும் பயந்தோமே   எனும் பேச்சு

2. விதவிதமாய்ப் பெற்ற விசயசரம் ஐயய்யோ
     விரகாக் கினியாலே                  கருக்கிறாய்
  மதிமோசம் உன்தன் விதிவசமோ சொன்னால்
     மனது கொள்ளாமல் அரு             வருக்கிறாய்
  அதிக வேதங்கள் ஓர்ஆயிரமும் தெரிந்தும்
     அறியாமலே செல்வம்                செருக்கிறாய்
  மிதிலைப்பெண் கற்பால் இந்த பதிவெந்த தல்லாமல்
     வேறொன்றால் வந்த தென்றோநீ எண்ணி இருக்கிறாய்

3. கருமலைபோல் இந்த நிருதரைக் கண்டால் அந்த
     காலருத்திரனுக்கும் உண்              டோவீரம்
  இருஇரு நான்இதோ புறப்படுகிறேன் என்முன்
     எவ்வளவவரிட                      ஆரவாரம்
  மருவுடன் சீதையை விடுவதே நல்ல
     மார்க்கம் இல்லா விட்டால்            இந்நேரம்
  ஒருமிக்க வேபோய் உனக்காச்சு எனக்காச்சென்று
     ஒருகை பாராமல் இங்கே குறுகுறுக்கும்   விசாரம்