பக்கம் எண் :

560

மனுக்குரதம் அனுப்பும் தேவர்களையும்மக
     வானையும் கடு       கடுத்து-லட்சுமணனை
மடித்துவரு வேனென்று வீரம் பேசிக்கையில்
     வலியதனுவை         எடுத்து-அதிககடுஞ்

சினத்தி னோடுபெரும் தேரை          ஓட்டிக்கொண்டு
     சேனைகளை எல்லாம்தன் பின்னே கூட்டிக்கொண்டு
கனத்த வில்லை வளைத்து நாணைப்     பூட்டிக்கொண்டு
     கணைகள் எய்து ராமன்கையில்    மாட்டிக்கொண்டு (மடிந்)

2. போர்களத்தினில் வந்து   அட்டகா சஞ்செய்து
     புவியெங்கும் கிடுகி    டென்ன-லட்சுமணன்மீதில்
  போகவிட்டிடுந் தேரை    மறித்து ராமன்மீதிற்
     போகட்டும் விடுவி    டென்ன-சாரதிஇந்தப்

  பார்க்குள் ராமனைவெல்லக் கூடாதென்று சொல்ல
     பற்களை நெடநெ     டென்ன-வேகடித்து
  பாரடா உன்னை விழுங்குவேன்  என்ன சாரதி
     பயந்துடல் விடுவி     டென்ன-நடுநடுங்கி

  கார்க்கடல் வண்ணன்ரா   மன்மீதில் தேர்விட
     கலங்காமலே மகோ    தரன்நின்று போரிட
  ஆர்க்கும் சேனைராமன்   அம்பினாற் பேர்கெட
     அதமாக அவன்மார்பில் ஓரம்பின் கூர்பட (மடிந்)

  மாலியவான் சொல்லால் சீதையை விடவே, சம்
     மதித்த ராவணனை    அன்று-தடுக்கப்பெரு
  வயிற்றைச் சாய்த்துக்கொண்டு குடுகுடென்றேஓடி
     வஞ்சனை எண்ணி    நின்று-அதிகபல

சாலியானரா வணனே மூவுலகமும்
     சௌரியத் துடனே         வென்று-இன்றுமனம்
தளர்ந்திந்த சனகியை விடலாமோ போபோஉன்
     தனக்கிது சரியோ         என்று-சொல்லியசொல்லும்

காலனைப்போலவன் பாலிலே இருந்து
     கழுவாக்கரைத்து நாளும் கலகம் செய்துதிரிந்து
சீலராமன் கணைக்குத் தன்சேனையை விருந்து
     செய்வித்தோர் கணையால்தான் பெருவயிறும் சரிந்து (மடிந்)