561 கடைசிநாளில் இராம இராவண யுத்தம் விருத்தம்-97 திடுதிடென ஓடிமகோதரனும் சென்ற சேனைகளும் சாமிகையில் மடிந்தபின்பு மூடுகிஇரு வரும்தேரில் ஏறிக்கொண்டு மூதண்ட கோடிகளும் நடுங்கவிட்டே கடுகிமலை யோடுமலை எதிர்த்தாற்போல கடலினொடு கடல் எதிர்த்தாற் போல் விற்கொண்டு அடும்இரா கவனும்இரா வணனும் அங்கே அடுத்திட்டார் சண்டைசெய்யத் தொடுத்திட்டாரே தரு-80 தோடி ராகம் அடதாளசாப்பு பல்லவி ராகவனுக்கும் ராவணனுக்கும் நடந்ததே சண்டை தொடர்ந்ததே அநுபல்லவி மேகத்தைப் போலவே அய்யன் கணைகள்சாட மேலத்தைக் காணாமல் வெய்யன் கணைகள்மூட வாகொத்த தேர்மேலே இருவரும் கதித்தாரே வானமும் பூமியும் ஒன்றாக மதித்தாரே வானரவெள்ளம் கடல்போலே களத்தைப்போய் வளைக்கவும் ஈனர்விடும்கைச் சரத்தாலே நெளித்துப்போய் இளைக்கவும் வாரிவிடும்கற் பெருக்காலே அரக்கர்க்காவி துள்ளவும் வீரர் விடும்கைத் தடிக்குச்சூழ் குரக்குச்சேனை விள்ளவும் வடவையொடுபொரு வடவை எனநிலை மலையினொடுபொரு மலையதெனஅலை கடலினொடுபொரு கடலதென விரி ககனமொடுபொரு ககணம்என அரி (ராக) சரணங்கள் 1. அரக்கன் ராவணன் சிலகணைகள் எய்தான் அதைக் கண்டேராமன் தவிடுபொடிகள் செய்தான் |