562 அரக்கன் நூறுநூறா யிரமம்பு தூற்றினான் அதைக்கண்டே ராமன் நொடியொன்றில் மாற்றினான் அரக்கன் ஆயிரமாயிரம் ஆயுதம் தொட்டான் அதைக்கண்டே ராமன் தூளிகள் தூளிகள் இட்டான் அரக்கன் தேரைஆ காசத்திற் போக்கினான் அதுக்கும் சாமிதேர் மேலாகத் தூக்கினான் ஆதிநெடுஞ் சேஷனும்பட்சீ சனம்பொற்றூ ணிடத்தேகன காசுரனும் சிங்கமும்தப்பா தடுத்துப்போர் தொடுத்தால்என ஆனதுரங்கம் திருப்பிக்கோல் பிடித்துத்தேர் விடுத்தேவரும் மாதலிசங்கம் தொனிக்கச்சே பயப்பட்டார் முடித்தேவரும் அக்கணம் இருதேரும் தடந்தத்தும் நிலந்தத்தும் திக்குத்திசை களும்போய் இடஞ்சுற்றும் வலம்சுற்றும் அப்புறம் மலைதாவும் அலைதாவும் கடல்தாவும் இப்புறம் செவிதாவும் புவிதாவும் கெவிதாவும் அன்றுமுனிவர் பயந்து கடகட என்றுபதறி நடுங்கி விடவிட அண்டமுகடு பிளந்து நிலைகெட மண்டலமும்மிசை விண்டு தலைகெட அதிர மலைகளும் அதிரநிலைகளும் அதிரவெகுதிசை அதிரமலையிடி அதிரஉத்திகள் அதிரமதிகதிர் அதிரஉடுவினம் அதிரஇப்படி (ராக) 2. வட திசைமுதல் நாலு திசையும் போவார் கடலிலும் போவார் கடல் அப்புறமும் போவார் மனது வேகமோ வாயு வேகமோ என்ன கனக லோகமோ கீழ் உலகமோ என்ன வருவர் ஓடுவர் கூடு வர்இரு தேரும் பொருவர் சேருவர் நேருவர்இதை ஆரும் வசன மாகஉரை யார்சொல் வாரொருக் காலே குசவ னானவன் விடுதிகிரியைப் போலே |