563 மாரிவழங்கும் பிரசண்டக்கொண் டலைப்போல இடித்தார் பலர் தீவும் விசும்பும் குலுங்கச்செஞ் சாக்காடா முடித்தார்சிலர் மாதலி அங்கம் தொலைத்துப்பாய் பரிக்குக்கோல் விடுத்தான்ஒரு சாமிநெடுந்தேர் மறைத்தங்கே துசத்தைக்கீழ்ப் படுத்தான் அவன் வளையராகவன் தேரை நிருதன் மூட லாலே இளையவன் முதலானோர் களையானார்அதன் மேலே மணவாள ராகவன் பனிபோல ஒத் தானே கணையெல்லாம் அறுத்தவன் கொடியையும்அறுத் தானே மால்ஒத்தவன் படை மாரி பெய்திட சூலப்படை கொடு சுவாமி கொய்திட வன்னி வாளியை அவன் விடுத்திட அன்னதே கொடு சாமி தடுத்திட மாமயன் படை அரக்கன் தொடுக்கவும் சாமிகந்தரு வஸ்திரம் எடுக்கவும் நாக லோகமும் புவியும் பொடிப்பொடி ஆகவே கள மீதில் அடிக்கடி (ராக) 3. சாமிமேல் ஒரு தெண்டவன் விடுத்திட சாமி ஓரம்பு கொண்டதைத் தடுத்திட சாமிமேல் அவன் மாயாஸ் திரம்போட சாமிதான் ஞானாஸ் திரந்தொடுத் ததைச்சாட சாமிமேல் சூலம் அவன்விடச் சினங்கொண்டு சாமி ஓங்காரம் செய்தது விழக்கண்டு சாமிமூவரும் இவனென்னும் விவகாரம் தம்பி சொன்னதை நினைந்தெண்ண அந்நேரம் தாகருடன் செஞ்சரத்தைக் கைப்பிடித்துச் சாமிதொட்டே அவன் நாகமெனும் செஞ்சரத்தைக் கொத்தவிட்டுத் தூளியிட்டான் ஒரு சாமிதிரும் பத்தொடுத்துப் பொற்பிறைக் கொக்கும் சரத்தால்வரு ராவணன் நெஞ்சைத் தொலைத்தொற்றைச் சிரத்தைத் துண்டம்இட்டான் தறிபடு சிரம் அவனுக்கு முளைத்திட சரிசரி அரியவே வரவரக் கிளைத்திட தறிபடுகையால் மாதலி மார்பைக் கலக்கினான் அவன் விடுதோ மரத்தையும் அய்யன் விலக்கினான் |