பக்கம் எண் :

564

தறித்தவன் சரீ            ரம்நிறைந்திட
     மயிர்க்கோர் அம்பது  ஆய் மறைந்திட
சலித்தவன்களை           ஆய்விழுந்திட
உணர்ச்சி கொண்டுட       னே எழுந்திட

சரமும் விடுவிடு           படையும் பொடிபட
சகலரதகச                தளமும் அடிபட
இருவர் மனதிலும்         வளர முழுபகை
எவரும் உடல்விட         விடென இவ்வகை (ராக)

4. எடுத்து ராவணன்   வளைத்த சிலை       தன்னை
  ஒடித்து நாணியை   அறுத்தும் இப்படிப்    பின்னை
  இடக்கை யோடவன் வலக்கையும்விழ       என்று
  துடித்து ராகவன்    முடுக்கினான்கணை    ஒன்று

  இழுத்துத் தேர்வரு  பரியும் பாகனும்       சாக
  அழுத்தத் தூணியும் குடையும் படையும்    போக
  எதிர்த்த ராவணன்  ஒருபதுமுடி          மேலே
  பதைத்து மாமலை   யினில் விழும்இடி     போல

ராமன் விடுசெஞ் சரத்திற்கொத்துடைப் பத்துப் பனங்காய்என
  நாய்நரி மண்டிக் கடிக்கக் கொக்கரித்து சுற்றிலும் போய்விழ
ராகவன் இப்படித் தொடுத்துக்கத் தரிக்கக்கத் தரிக்கத்தலை
  ராவணனுக்குச் சரிகட்டிச் சரிக்கட்டிக் கிளைத்துக்கொள

இப்புறம் ராமன் அரக்கன் மாளும் வகை என்ன
அப்புறம் விபீஷணன் உபாயம் முறை பன்ன
லட்சுமி சீதையும் காவல் கொண்ட சிறை தீர
தட்சண சூரியன் தேரும் லங்கை வழி சேர

இணக்கிடும் காதண்ட       மனுமதி
வணக்கிடும் கோதண்ட      நடுவதில்
இட்டு கைபிரமாஸ்தி        ரம்தனை
விட்டிடத்தனி ராட்ச        தன்புனை

ரத்தின மணிமருமத்தின்     இடையிட்டு
வைத்த அமுர்த கடத்தில்    அடிபட்டு
மத்தன் விடுகிற சித்திர      ரதம் விட்டுப்
பத்து மணிமுடி தத்தி       விழும் மட்டும் (ராது)